உங்கள் மூளையின் வயதை கண்டறிய வேண்டுமா ?






உங்கள் மூளையின் வயதை கண்டறிய வேண்டுமா ?



உங்கள் வயதைக் கேட்டால் சொல்லிவிடலாம்உங்கள் மூளையின் வயது என்ன? என்று கேட்டால் என்ன செய்வீர்கள் ?

மூளைக்கும் நம் வயது தானே. மூளைக்கு ஏது தனி வயது என்று எண்ணுகிரீர்களாஅது தான் இல்லை.

மூளைக்கு வயது அதன்  செயல் திறனைப் பொறுத்து உள்ளதுஉடல் வளர்ந்து தளர்ந்தாலும்மூளை செயல்படுவதைப் பொறுத்து தளர்வதில்லைஎனவேஉங்களுக்கு வயதானாலும்உங்கள் மூளையின் வயது குறைவாக இருந்தால்நீங்கள்   புத்திசாலி என்று அர்த்தம்.   



விளையாட்டுக்களாகத் தரும் சோதனைகளுக்கு நம்மை உட்படுத்திக் கொண்டால், நம் மூளையின் வயதைக் காணலாம். இது எப்படி இயங்குகிறது எனப் பார்க்கலாம். இதில் ஐந்து பிரிவுகள் உள்ளன. மெமரி (விளையாட்டின் பெயர் Recall) என்ற பிரிவில், பொருட்கள் காட்டப்பட்டு அவை எந்த வரிசையில் காட்டப்படுகின்றன என்று நாம் காட்ட வேண்டும். முதலில் எளிதாக இருந்தாலும், போகப்போகச் சவால் விடும் வகையில் உள்ளது. இந்த விளையாட்டு விளையாடும் தளத்தின் கீழாக மெமரி என்பது என்ன; அதனை எப்படி நாம் தீட்டி வைத்துக் கொள்ளலாம் என்று டிப்ஸ்கள் வழங்கப்படுகின்றன.



இவை அனைத்தையும் விளையாண்டு முடித்தவுடன் உங்களின் மூளை வயது காட்டப் படுகிறது. உங்கள் வயதுடன் ஒப்பிட்டுப் பார்த்து நீங்கள் உங்கள் மூளைத் திறன் எப்படி உள்ளது என அறியலாம்.

ஒருமுறை விளையாடிப் பார்த்தால், நிச்சயம் மூளைத்திறன் உயரும் என்று எண்ணுகிறேன். அடுத்த பிரிவு மொழி (Anagrams) : எழுத்துக்கள் தரப்பட்டு, சொற்களை அமைக்கும் சோதனை. இதில் எழுத்துக்களை இழுத்து வரிசையில் அமைத்துச் சொற்களை அமைக்க வேண்டும்.

ஒரு இமேஜ் காட்டப்படும். திடீரென இது மாறும். மாறுகையில், ஒரே ஒரு இடத்தில் மட்டும் மாற்றம் இருக்கும். அது என்ன என்று மவுஸால் காட்ட வேண்டும். சற்று சிக்கலானதுதான். ஆனால் விளையாட மிகவும் ஆர்வமாக இருக்கும். Blink என்று இதற்குப் பெயர்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad