வருங்கால மனைவியுடன் கென்யாவுக்கு சுற்றுலா: விடுமுறையை வித்தியாசமாக செலவிடும் ரோஹித்
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரோஹித் சர்மா விலங்குகள் பாதுகாப்புக்காக பிரச்சாரம் செய்து வருகிறார்.
அழிந்து வரும் விலங்கினமாக கருதப்படும் காண்டாமிருகங்கள் கென்யாவில் அதிகம் வேட்டையாடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அவர் கென்யாவில் காண்டாமிருகங்களை பாதுகாக்கும் Ol Pejeta என்ற பகுதிக்கு சென்றுள்ளார். அவருடன் வருங்கால மனைவியான ரித்திக்காவும் சென்றுள்ளார்.
இருவரும் ஒரு ஆண் வெள்ளை நிற காண்டமிருகத்திற்கு உணவளித்து அதனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த பகுதியில் இருக்கும் கடைசி வெள்ளை நிற காண்டாமிருகம் அது மட்டுமே.
இந்த புகைப்படங்களை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் "கடைசி ஆண் காண்டாமிருகம்" என்று குறிப்பிட்டு பதிவேற்றியுள்ளார். அதே போல காண்டாமிருகத்திற்கு உணவளிக்கும் வீடியோவை இண்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
ஆப்பிரிக்காவில் உள்ள 2 அழிந்து வரும் விலங்கு பாதுகாப்பு பகுதியில் Ol Pejeta-வும் ஒன்று. இது இயற்கை வளங்கள் பாதுகாப்பு சர்வதேச ஒன்றிய (IUCN) பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.