"சிக்ஸ் பேக்" வைப்பதால் ஏற்படும் தீமைகள் என்ன?
இன்றைய இளைஞர்கள் அழகின் முகவரி எதுவென்று கேட்டால் சிக்ஸ் பேக் என்பார்கள்.
அந்த அளவுக்கு சிக்ஸ் பேக் மீது பைத்தியமாக இருக்கிறார்கள்.
அதற்காக ஸ்டீராய்டு என்கிற ஊக்க மருந்தைப் பயன்படுத்துகிறார்கள். இது உயிருக்கே ஆபத்தானது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
பொதுவாக உடலில் சேரும் கொழுப்பு உடலியக்கத்தின் மூலம் இயல்பாகவே கரைந்து போகும். சில சமயங்களில் கரையாமல் ஆங்காங்கே சேர்ந்து போகும்.
இப்படி சேரும் கொழுப்பைக் கரைத்து தசைகளாக வயிற்றுப்பகுதியில் உருமாற்றுவது தான் சிக்ஸ் பேக்.
ஒருமுறை சிக்ஸ் பேக் கொண்டு வந்து விட்டாலும் அதை தொடர்ச்சியாக பராமரிப்பது கஷ்டம். அதனால் தான் உடற்பயிற்சி மூலம் இதைப் பெற வேண்டும்.
அதற்காக ஒரு சிலர் ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக் கொள்கிறார்கள். அதனால் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும் ஆபத்து உண்டு.
ஆண்மைக்கு காரணமாக இருக்கும் ஹார்மோன் டெஸ்டோடீரோன். இயல்பாக சுரக்கும் இந்த ஹார்மோனை அதிக அளவில் சுரக்க செய்வது ஸ்டீராய்டு.
இந்த ஹார்மோன் அதிகம் சுரந்தால் உடல் எடை கூடும். தசைகள் அளவில் பெரிதாகும். அதன்மூலம் ஏற்படும் பக்க விளைவுகள் மிக பயங்கரமானவை. முதலில் ஏற்படுவது ஆண்மைக் குறைவு தான்.
மேலும் மலட்டுத்தன்மை, குரல் மாற்றம், கல்லீரல் கேன்சர், மார்பில் அதீத ரோம வளர்ச்சி, நரம்புத்தளர்ச்சி, பார்வைக் குறைபாடு போன்றவையும் ஏற்படும்.
அழகான ஆரோக்கியமான உடலுக்கு அன்றாடம் எளிதான உணவு வகைகளும் இயல்பான உடற்பயிற்சியுமே போதும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.