கடலுக்கடியில் புதைந்து கிடக்கும் பண்டையக் காலத்து அற்புத நகரங்கள்!!!
கடலுக்கடியில் புதைந்து கிடக்கும் பண்டையக்
காலத்து அற்புத நகரங்கள்!!!
போர்ட் ராயல்
ஜமைக்கா கடற்கொள்ளையர்களுக்கு பெயர்போன பகுதி தான் இந்த போர்ட்
ராயல். பாலியல், சாராயம், இரவு விருந்துகள் போன்றவை தான் இந்நகரின் சிறப்பு. கடந்த 1692 ஆண்டு எற்பட்ட மாபெரும் பூகம்பத்தினால் இந்த தீவு நகரமான போர்ட் ராயல்
கடலுக்குள் மூழ்கியது. இதில் 2000-க்கும்
மேற்ப்பட்டவர்கள் இறந்ததாக கருதப்படுகிறது.
பிரமிடு ஆப் யோனகுனி-ஜிமா
ஜப்பான் இந்த யோனகுனி நினைவுச்சின்னம் மனிதர்களால் உருவாக்கப்பட்டதா? அல்ல இயற்கையாக நிகழந்ததா? என்ற வாதம் இன்றுவரை நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், கிடைத்த ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் போது இது இயற்கையாக நிகழந்தது
தான் என்று கூறப்படுகிறது. ஒருவேளை இது மனிதர்களால் உருவாக்கப் பட்டிருந்தால் இது
கடைசி பனியுகத்தில் கட்டமைக்கப்பட்டதாக இருந்திருக்க வேண்டும் என்றும் சிலர்
கூறுகிறார்கள்.
துவாரகை
இந்தியா கிருஷ்ண பரமாத்மா வாழ்ந்த நகர் என்று கூறப்படும் துவாரகை ஓர்
இயற்கை சீரழிவால் கடலுக்குள் மூழ்கியது. கடந்த 2000ஆம் ஆண்டில் இது கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டது. 70,000 மாளிகைகள், தங்கம், வைரம்
போன்ற நகைகளால் நிறைந்திருந்தது துவாரகை என புராணக் கதைகள் கூறுகின்றன. இப்போது
கடலுக்குள் 135அடி கீழே இந்நகரம் மூழ்கியிருக்கிறது.
லயன் சிட்டி ஆப் குயன்டோ லேக்
சீனா-கடலுக்கடியில் மூழ்கிய பண்டைய நகரங்களில் மிகவும் அற்புதன்மான
நகராக இவ்விடம் கருதப்படுகிறது. பல நுணுக்கமான கட்டிட வேலைப்பாடுகள் கொண்ட
பகுதியாக இந்நகரம் இருக்கிறது. இங்குள்ள சிலைகள் எல்லாம் மிகவும் நுட்பமாக
உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்போது இந்த இடம் சீனாவின் முக்கியமான ஒரு சுற்றுலா
இடமாக இருக்கிறது.
கிளியோபாட்ரா மாளிகள்
அலெக்ஸ்சாண்ரியா, எகிப்து
எகிப்து ராணி கிளியோபாட்ராவின் மாளிகை தான் இது. கடற்கரை பகுதியில் அமைந்திருந்த
இந்த நகரம் ஓர் பூகம்பத்தின் காரணமாக கடலுக்குள் மூழ்கியது. கிளியோபாட்ராவின்
கல்லறை, ராஜ மாளிகையோடு சேர்த்து வழிபாட்டுத் தலங்கள்
போன்ற வேறு சில இடங்களும் கூட மொத்தமாக கடலுக்குள் மூழ்கிவிட்டது. சுற்றுலா
பயணிகள் இப்போது இவ்விடத்திற்கு சென்று வருகிறார்கள்.