Matrimony OTT-Platforms Jobs Coupons Business

காட்டன் துணி உடுத்துரதனால இவ்வளோ நன்மை இருக்கப்போ, ஜீன்ஸு எதுக்கு!!!



            உடைகள் என்பது அவரவர் நாட்டு வெட்ப நிலைக்கு ஏற்றார் போலவும், பணிபுரியும் வேலைக்கு ஏற்றார் போலவும் தான் ஆதிகாலத்தில் உடுத்தப்பட்டு வந்தது. பின் ஃபேஷன் என்ற பெயரில் நம் நாட்டின் வெட்ப நிலைக்கு ஒத்துபோகாத உடைகளை உடுத்த ஆரம்பித்துவிட்டோம் 

            பருத்தி என கூறப்படும் காட்டன் துணியானது, நமது இந்திய நாட்டின் வெட்ப நிலைக்கு சரியாக பொருந்தும் உடையாகும். இது, வெயில், குளிர் என இரண்டு காலங்களிலும் உடுத்தலாம். ஆனால், பெரும்பாலும் நாம் ஜீன்ஸ் மற்றும் சூட்'களுக்கு மாறிவிட்டோம், காரணம் ஃபேஷன் மற்றும் ஐ.டி கலாச்சாரம்.

           ஜீன்ஸ் என்பது அயல்நாட்டில் கார்பெண்டர் வேலை செய்பவர்களுக்காக தயாரிக்கப்பட்ட உடையாகும். மற்றும் சூட் உடுத்தாமல் அவர்களால் வெளியில் செல்ல முடியாது, காரணம் அந்த கடும் குளிருக்கு அத்தகையான உடைகள் தான் உடுத்த வேண்டும் என்ற கட்டாயம் மற்றும் அது அவர்களது நாகரீகமாக மாறியிருந்தது. 

             கொஞ்சம் யோசித்து பாருங்கள், சென்னை மாநகரில் கொளுத்தும் வெயிலில் சூட் அணிந்து டை கட்டிக்கொண்டு சென்று, வீடு திரும்பும் போது, அந்த ஆண் சிக்கன் 65 ஆக தான்


இருப்பார். எனவே, நமது காலநிலைக்கு ஏற்ற உடையான காட்டன் உடை உடுத்துவது தான் நல்லது மற்றும் அதில் நிறைய நன்மைகளும் இருக்கின்றன...


  • இயற்கை மற்றும் ஈரப்பதம் பருத்தி என்பது இயற்கையான முறையில் கிடைக்கும் நூல் வகை ஆகும். இது ஈரப்பதத் தன்மையை கொண்டுள்ளது. எனவே, வெயிலிலும் உடலை குளுமையாக உணர செய்யும்.
  • காட்டன் நூலிழைகள் கற்று புகும் தன்மையுடையவை. எனவே, எவ்வளவு வெயிலாக இருந்தாலும் காற்றோட்டமாக இருக்கும். இதனால், கடும் வெயிலிலும் வெப்பம் குறைந்து உணரப்படும்.
  • காட்டன் துணியின் மிக சிறந்த நன்மை என கருதப்படுவது, வியர்வையை உறிஞ்சும் தன்மை. நீங்கள் அதிகம் வெயிலில் அலையும் போது, பாலியஸ்டர் துணிகளும், பாலியஸ்டர் கலப்பு உள்ள துணிகளும் வியர்வைய உறிஞ்சாது அதனால் நாள் முழுக்க வியர்வை உடலில் ஒற்றியப்படியே இருக்கும்.
  • காட்டன் உடைகள் வெயில் மற்றும் குளிர் என இரண்டு காலங்களிலும் உங்கள் சருமத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. வெப்பத்தை குறைப்பதனால், கோடை சரும பிரச்சனைகள் ஏற்படாமல் உங்கள் சருமத்தை காக்கிறது.மற்ற உடைகள் அணியும் போது உங்கள் சருமதிற்கு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. அதும், கோடையில் கட்டாயம் சரும ஒவ்வாமை ஏற்படும். காட்டன் துணி உடுத்துவதால் சரும ஒவ்வாமைகள் ஏற்படாது.
  • உடுத்த மிகவும் வசதியான உடை காட்டன் ஆகும். மற்ற உடைகளை போல அசௌகரியம் இல்லாமல் இருக்கும்.
  • மற்ற உடைகளோடு ஒப்பிடுகையில் பருத்தி உடையானது நிலைப்புத்தன்மை அதிகமுடையது. வருடங்கள் பல கடந்தாலும் நிலைத்து உழைக்கும்.
  • ஒவ்வோரு உடையும் ஒவ்வோரு மாதிரி துவைக்க வேண்டும் என்று சில குறிப்புகள் தரப்பட்டிருக்கும். ஆனால், காட்டன் துணியை சுடுநீர், குளிர்ந்தநீர் என்று எந்த நீரிலும் எளிதாக துவைக்கலாம், சேதமடையாது.
  • சில வகை துணிகள் ஓரிரு முறை அல்லது ஓரிரு மாதங்கள் பயன்படுத்திய பிறகு நிலை மாற்றமடைந்துவிடும். சுருங்குவது, ஏற்ற இறக்கமாக, அங்கும் இங்கும் இழுத்தவாறு இருக்கும். ஆனால், பருத்தி உடைகள் அவ்வாறு ஆகாது.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad