புத்தகத்தை படிச்சு கிழிச்சாச்சு இல்ல,, கிழிச்சு குடிச்சாச்சு..
புத்தகத்தை படிச்சு கிழிச்சாச்சு இல்ல,, கிழிச்சு குடிச்சாச்சு..
புத்தகம் அறிவு தாகத்தை தீர்க்கும்; தண்ணீர் தாகத்தை
தீர்க்குமா?
தீர்க்க வந்திருக்கிறது, 'பருகத் தக்க புத்தகம்' (ட்ரிங்கபிள்
புக்)!
அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின், உலக
சுகாதார மையம் உருவாக்கியிருக்கும் இந்த புத்தகத்தின் பக்கங்கள் உண்மையில்,
அதிநவீன நேனோ தொழில்நுட்பத்துடன் கூடிய வடிகட்டிகள்.
வெள்ளி மற்றும் தாமிர நேனோ துகள்களால் உருவாக்கப்பட்ட, இந்த
வடிகட்டிகளை புத்தகத்தில் இருந்து கிழித்து, அதன் மீது அசுத்தமான
நீரை ஊற்றினால், 99.9 சதவீதம் தூய்மையான குடிநீர் கிடைக்கும். பரிசோதனைக்காக சாக்கடை நீரைக்கூட ஊற்றி சோதித்திருக்கின்றனர், ஆய்வாளர்கள்.
ஆப்ரிக்க நாடுகளில், தொற்றுக் கிருமிகள் நிறைந்த குடிநீர் தான் கிடைக்கின்றன என்பதால்,
அந்த நாடுகளிலுள்ள மக்களுக்கு, நவீன வடிகட்டிகள்
எளிதில் கிடைக்கச் செய்வதற்காகத் தான், இந்த பருகத் தகுந்த புத்தகம்
உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகம் பல கோடி பிரதிகள் விற்கும் என்பதில்
சந்தேகமில்லை.