பெண்களை கவர்வது எப்படி???





பெண்களை கவர்வது எப்படி???



அவர்கள் எதிர்பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து, எனக்கு தெரிந்த பல பெண்களின்  கருத்துகளிலிருந்து, ஒரு ஆணின் கவர்ச்சி என்னஎன்பதை பதிவிடுகிறேன், இது என் தனிபட்ட  கருத்துக்கள் அல்ல என்பதை நினைவில்  கொள்க!!!



'ஆண்களின் கவர்ச்சி' என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது. ஒவ்வொன்றாக பார்க்கலாம்....

நிறம்




ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என ' fair complexion' உள்ள பெண்கள் கூட எதிர் பார்ப்பதில்லை. ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து.
[இன்றைய நடிகர்களில், ஷ்ரிகாந்தை விட விஷாலுக்கு தான் பெண் விசிறிகள் அதிகம்!]

முக தோற்றம்





ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்கள் 'மீசை'க்கு           முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். 'மீசை' ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது   அவர்கள்           கருத்து.


மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ ' தாடி' பிடிப்பதில்லை., காரணம் நம்மூர் ஆண்களுக்கு தாடி வளர்த்தால் அதை ஒழுங்காக மெயின்டேன் பண்ண தெரிவதில்லை என்பதுதான்.
சரியாக டிரிம் பண்ணாமல் காடு மாதிரி வளர்ந்த தாடி ஒரு ஆணை சோகமாகவும், நோய்வாய் பட்டது போலவும் தோற்றமளிக்க செய்துவிடும்.

உடை அலங்காரம்




பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அதனால் நல்ல ' ட்ரெஸ் ஸென்ஸை' [ dress sence] ஆணிடமும் எதிர்பார்க்கிறார்கள்.

உடல் தோற்றம்




மிகவும் மெலிந்த , ஒல்லியான தோற்றம் பெண்களை கவர்வதிலலை, அதற்காக தொந்தி, தொப்பை வைத்துக் கொள்ளகூடாது. உயரத்திற்கேற்ப எடை , கட்டு மஸ்தான உடம்பு இதுதான் அதிக பெண்களை கவரும்.
ஸ்போர்ட்ஸில் அதிக ஈடுபாடு உள்ள ஆண்களை பெண்கள் விரும்புவதற்கு காரணம் இதுவே.

பேச்சு திறன்




முதன் முறையாக ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொட வென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடாது. அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றின சொந்த விஷயங்களை personal details] நோண்டி நோண்டி கேட்க கூடாது.
அவளுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவள் பேசும் போது கூர்ந்து கவனிக்க வேண்டும் - அவள் முகத்தை மட்டும்!












































Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad