அஷ்டீலா(ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகளை சார்ந்த ஒரு உறுப்பாகும்) எனும் கட்டி, சிறுநீர்ப் பையில் கல்...இன்னும் பல அரிய மருத்துவ குணங்களை உள்ளடக்கும் சதுரக்கள்ளி
சதுரக்கள்ளி (ஸ்நுஹி)
(Euphorbia Ligularia)
அமைப்பு
கள்ளியில் பலவகைகள் உண்டு. பொதுவாகக் கள்ளி எனப்படுவது சதுரவடிவில் உயர்ந்து முட்கள் நிறைந்து வளரும். மேல்பகுதியிலுள்ள கிளைகள் உருண்டையாகப் பச்சை நிறம் கொண்டு காணப்படும். இதன் இலைகள் மென்மையுடனும் பச்சை நிறத்துடனும் காணப்படும்.
மிகக்கூர்மையுடனும் குறைந்த அளவில் முட்கலுள்ள கள்ளி சிறந்தது. இதை ஒடித்தால் வெண்ணிறமுள்ள பால் சுரக்கும். இரண்டு, மூன்று ஆண்டுகள் கொண்ட செடியின் தண்டில் சிசிரருதுவில் கூர்மையான ஆயுதத்தால் கீறி அதன் வழியே பெருகும் பாலைச் சேகரிக்க வேண்டும்.
தன்மை
மலத்தை வெளித்தள்ளும். தீஷ்ணகுணம் உள்ளது. செரிமானத்தை தூண்டும். கார்ப்புச் சுவையுள்ளது.
பயன்
இதன் வேர், இலை மற்றும் பால் என்பன மருந்துப் பொருட்களாகப் பயன்படும்.
தீர்க்கும் நோய்கள்
வயிற்று வலி குணமாகும். அஷ்டீலா எனும் கட்டி(Prostate Gland - ப்ராஸ்டேட் சுரப்பி என்பது ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகளை சார்ந்த ஒரு உறுப்பாகும். இது சிறுநீர்ப்பையின் அடிப்புறம் ஆண்குறியின் மேற்புறம் சிறுநீர்ப்பையும் வெளிசிறுநீர்க் குழாயும் சேரும் இடத்தில் ஒரு நெல்லிக்காய் அளவு உள்ளது. இதன் வேலை ஆண் உயிரணுக்களை கொண்ட விந்துவின் அளவை அதிகரிக்கும் திரவங்களை சுரப்பதாகும். இதைப் பற்றிய விரிவான தகவலை அடுத்த பகுதியில் பார்க்கலாம்).
வயிற்று உப்புசம், கபம், குன்மம், பெருவயிறு, வாதம், பைத்தியம், நீரிழிவு, குட்டம், மூலநோய், வீக்கம்(Anti-Inflammatory), உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்தல், சிறுநீர்ப் பையில் கல், சோகை, இரணம், காய்ச்சல், மண்ணீரல் வீக்கம், நஞ்சு இடுமருந்தாக பயன்படுகிறது.