'அழகு' அரவிந்தசாமி... வில்லத்தனத்திலும் "பிரில்லியன்ட்"!
'அழகு'
அரவிந்தசாமி...
வில்லத்தனத்திலும்
"பிரில்லியன்ட்"!
வில்லன் என்றாலே பயங்கர
உருவம், மிரட்டும் குரல், நயவஞ்சக சிரிப்பு என்ற டிரேட் மார்க்கை உடைத்து
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் அழகிய வில்லன்கள் வலம் வருகின்றனர். அதிலும் முன்னாள்
ஹீரோக்கள் சிலர் தற்போது அழகிய வில்லன்களாக மறுபிரவேசம் செய்துள்ளனர்.
அனேகன் படத்தில்
தனுஷிற்கு வில்லனாக கார்த்திக்கும், என்னை அறிந்தால் படத்தில் அஜீத்திற்கு
வில்லனாக அருண் விஜய்யும் நடித்திருந்தனர்.
தற்போது அந்தப் பட்டியலில் அழகான வில்லனாக சேர்ந்துள்ளார்
நடிகர் அரவிந்த்சாமி. மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி இயக்கத்தில் தனி ஒருவன் படத்தில்
வில்லனாக நடித்துள்ளார் அரவிந்த்சாமி.
அரவிந்த்சாமி மாதிரி மாப்பிள்ளை...
இன்றும் மாப்பிள்ளை அரவிந்த்சாமி மாதிரி வேண்டும் என
சொல்லும் பெண்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். அந்தளவிற்கு தன் அழகால் ரசிகைகள் மனதில்
இடம் பிடித்த அரவிந்த் சாமிக்கு அடுத்தடுத்து வெற்றிப் படங்கள் அமையவில்லை.
நடிப்பில் அசத்தல்...
சித்தார்த் அபிமன்யு என்ற கதாபாத்திரத்தில் தன் சுயநலத்திற்காக
சிரித்துக் கொண்டே வில்லத்தனம் செய்யும் வேடத்தில் கலக்கியுள்ளார் அரவிந்த்சாமி. தன்
இஷ்டப்படி தன் தந்தையை ஆட்டி வைக்கும் காட்சிகளிலும், கடைசியில் சிரித்துக் கொண்டே
உயிரை விடும் காட்சியிலும் நடிப்பில் அசத்துகிறார் அரவிந்த்
சாமி.
அழகிய வில்லன்...
ஹீரோவுடன் கட்டிப் பிடித்து உருண்டு சண்டை போட்டு ரத்தக்களறி
ஆக்காமல், சட்டை கசங்காமல் அழகிய வில்லனாகவே வலம் வருகிறார் அரவிந்த்சாமி. ஜெயம் ரவிக்கு
இணையாக தனி ஒருவனாக மனதில் இடம் பிடித்துள்ளார் என்றால் மிகையில்லை.