கால்பந்து விளையாட்டில் 9 நிமிடத்தில் 5 கோல்கள் அடித்து சாதனை
முனிச்: ஜெர்மனியில் நடந்த உள்ளூர் கால்பந்து போட்டியில் பேயர்ன் முனிச்
வீரர் ராபர்ட் லிவான்டோஸ்கி 9 நிமிடத்தில் 5 கோல் அடித்து சாதனை
படைத்தார்.
ஜெர்மனியில் ‘பன்டஸ்லிகா’ உள்ளூர் கால்பந்து தொடர் நடக்கிறது.
முனிச்சில் நடந்த இதன் லீக் போட்டியில் வோல்ப்ஸ்பர்க், பேயர்ன் முனிச்
அணிகள் மோதின. முதல் பாதியின் 26வது நிமிடத்தில் வோல்ப்ஸ்பர்க்
அணியின் டேனியல் ஒரு கோல் அடித்த்தார். இரண்டாவது பாதியில் பேயர்ன்
முனிச் அணி சார்பில் ராபர்ட் லிவான்டோஸ்கி (போலந்து) மாற்று வீரராக
களமிறங்கினார். போட்டியின் 51வது நிமிடத்தில் லிவான்டோஸ்கி முதல்
கோல் அடித்தார். இதன் பின் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு
வந்தார். அடுத்தடுத்து (52,55வது நிமிடம்) இரண்டு கோல் அடித்து ‘ஹாட்ரிக்’
சாதனை நிகழ்த்தினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர்
57, 60வது நிமிடத்தில் தலா ஒரு கோல் அடித்தார். இதன் மூலம், 9 நிமிடத்தில் 5
கோல் அடித்து அசத்தினார். முடிவில், பேயர்ன் முனிச் அணி 5–1 என்ற கோல்
கணக்கில் வெற்றி பெற்றது.