6 சீட்டர் மஹிந்திரா XUV100 இந்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது!









4 மீட்டர் மினி XUV காருக்கு XUV100 எனப் பெயரிட்டிருக்கிறது மஹிந்திரா. மறைமலைநகரில் உள்ள மஹிந்திரா ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தில் உருவாகும் இந்த கார் சென்னையில் டெஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. மஹிந்திராவின் XUV100 ஆறு சீட்டர் கார் என்பது உறுதியாகி இருக்கிறது. முன்பக்கம் மூன்று பேர் உட்கார வேண்டும் என்பதற்காக டேஷ்போர்டிலேயே கியர் லீவர் வைக்கப்பட்டிருக்கிறது. டயல்களைப் பொருத்தவரை XUV 500 காரில் இடதுபக்கம் இருந்த ஸ்பீடோமீட்டர் டயல் XU100 காரில் வலதுபக்கம் மாறியிருக்கிறது. ஏஸி ஸ்விட்சுகளுக்கு அருகில் பெரிய இடம் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கிறது. TUV300 காரில் இருக்கும் அதே 3 சிலிண்டர் டீசல் இன்ஜின்தான் XUV100 காரிலும் இடம்பிடித்திருக்கிறது. 1.5லிட்டர் டீசல் இன்ஜின் கொண்ட இது 85bhp சக்தியை வெளிப்படுத்தும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad