4 நாட்களில் 13 கோடி... கோலிவுட்டின் வசூல் ராணியாக மாறிய "நயன்தாரா"
சென்னை: நயன்தாராவின் நடிப்பில் கடந்த விநாயகர் சதுர்த்தியன்று வெளியான "மாயா" திரைப்படம் வெளியான 4 நாட்களில் சுமார் 13 கோடியை
கோலிவுட்டின் ராணியாக இதுவரைத் திகழ்ந்த நயன்தாரா தொடர்ச்சியான வெற்றிகள் மற்றும் படங்களின் மூலம் கோலிவுட்டின் வசூல் ராணியாகவும் தற்போது மாறியிருக்கிறார். ஒரு காலத்தில் குஷ்பூ மற்றும் சிம்ரன் ஆகியோர் தங்களின் நடிப்பால் தமிழ்நாட்டு ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்தனர். தற்போது நயன்தாராவும் அந்த வரிசையில் இணைந்திருக்கிறார்.
முன்னணி நடிகர்களுக்கு இணையாக
விஜய், அஜீத் போன்ற முன்னணி நடிகர்களுக்கு இணையாக தற்போது நயன்தாராவும் மாறியிருக்கிறார். சமீபகாலமாக நயன்தாரா பெயர் இல்லாமல் எந்தப் படங்களும் வருவதில்லை. த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். வாலு படத்தில் சிம்பு நயன்தாரா பெயரை பயன்படுத்தியதும், வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படத்தில் ஆர்யா நயன்தாரா பெயரை பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
தனி ஒருவன்
ஜெயம் ரவியுடன் நயன்தாரா இணைந்து நடித்த தனி ஒருவன் திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து வசூலில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இதுவரை படம் சுமார் 75 கோடிகளை வசூலித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
மாயா
தனி ஒருவன் திரைப்படத்தின் தாக்கம் குறைவதற்குள் நயன்தாரா நடிப்பில் உருவான மாயா திரைப்படம் கடந்த விநாயகர் சதுர்த்தியன்று வெளியானது. முழுக்க முழுக்க நயன்தாராவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், 4 நாட்களில் சுமார் 13 கோடியை உலகமெங்கும் வசூலித்து இருக்கிறது. இந்தத் தகவலை படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.
புலி வரும்வரை
மாயா வந்ததிலிருந்து இதுநாள்வரை திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்த வாரம் விஜயின் நடிப்பில் புலி திரைப்படம் வெளியாகவிருக்கிறது. புலி வரும்வரை நயன்தாராவின் மாயா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் முன்னிலை வகிக்கும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
நானும் ரவுடிதான்
நயன்தாராவின் நடிப்பில் அடுத்ததாக நானும் ரவுடிதான் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தையும் நயன்தாராவை முன்னிலைப்படுத்தியே படக்குழுவினர் விளம்பரம் செய்யவிருக்கின்றனராம். நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாராவின் பெயர் காதம்பரி என்பது குறிப்பிடத்தக்கது.