கோவை(COCCINIA GRANDIS) அரிய மருத்துவ குணங்கள்
கோவை (பிம்பி (அ) துண்டி - ஆயுர்வேதம் )
(COCCINIA GRANDIS)
தன்மை
இனிப்புச்சுவை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, அதன் பயணத் தன்மை(Sperm Motivity) அதிகரிக்கும். இதன் பழம் சிவப்பு நிறத்தில் இருப்பதால் இதற்கு 'இரத்த பலா' என்றும் பெயர்.
தீர்க்கும் நோய்கள்
- பித்தம், இரத்ததோஷம் மற்றும் வாதம் தீரும்.
- கோவை இலையை மேல்பூச்சாக பூச, Anti-Bacterial மற்றும் Micro Organism என்று சொல்லக்கூடிய நுண்கிருமிகளை போக்கும்.
- இரத்தத்தை சுத்தம் செய்வதால், சொறி , சிரங்கு, படை குணமாகும்.
- நீர் + காய்(நறுக்கியது) + இலை + பூ => இதை நன்றாக கொதிக்க வைத்து, சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இரத்த சர்க்கரை குறைவு(Hypoglycemic), மண்ணீரல்(Spleen) மருந்தாக பயன்படுகிறது. வயிற்றுப் புண்களை ஆற்றும். இரைப்பை வாயுக்களை அகற்றும் ஒரு அகட்டு வாய்வு அகற்றி (Carminative)-யாக செயல்படும். புற்றுநோயை தடுத்து(Anti - Cancer) நிறுத்தும். இரசவேற்காடு, வாயு வேற்காடு என்று சொல்லக்கூடிய நிலை குணமாகும்.
- கோவைக்காய் சமைத்து உண்ண சர்க்கரை நோய் விரைவில் குணமாகும்.
- கோவை இலையை மேல்பூச்சாக பூச, வியர்வையை உண்டாக்கி உடலுக்கு குளிர்ச்சி தரும்.
- விளக்கெண்ணெய் + கோவை இலை சாறு (அ) விழுது => இதை நன்றாகக் கொதிக்க வைத்து, மணற்பாங்கான நிலைக்கு வர வேண்டும்.
- இதை சேர்த்து வைத்து, தோல் நோய்களுக்கு மேல் பூச்சாக பூச சொறி சிரங்கு(Scabies) குணமாகும்.
- சொரியாசிஸ், போன்ற நோய்களுக்கு மேல்பூச்சாக பூசி, உள்ளுக்கும் சாப்பிட்டு வர குணமாகும். சொரியாசிஸ் குணப்படுத்தக்கூடிய ஒன்று.
- ஈரலை(Hepatoprotective) பாதுகாக்கும் அருமருந்தாக பயன்படுகிறது.