என் வெற்றிக்கு பின்னால் நிறைய அவமானங்கள் இருக்கிறது - விஜய் பேட்டி
கத்தி படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் புலி சிம்புதேவன் இயக்கத்தில், விஜய்யுடன் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி, ஸ்ரீதேவி, நான் ஈ, சுதீப் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள புலி படம் பேண்டஸி படமாக தயாராகியுள்ளது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க, விஜய்யின் மக்கள் தொடர்பாளர் பிடி.செல்வகுமார் தயாரித்துள்ளார். விஜய் நடித்த படங்களிலேயே அதிக பொருட்ச்செலவில் இப்படம் தயாராகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து தற்போது போஸ்ட் புரொடாக்ஷ்ன்ஸ் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் இசை வௌியீட்டு விழா, சென்னை மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரெஸ்ஸாட்டில் பிரமாண்டமாக நடந்தது. புலி படத்தின் இசை தட்டை, விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் வௌியிட, விஜய்யின் மனைவி சங்கீதா பெற்றுக் கொண்டார். விழாவில் நடிகர் விஜய் பேசும்போது... என் வெற்றிக்கு பின்னால் நிறைய அவமானங்கள் உள்ளது. தோல்வியால் நிறைய விஷயங்களை கற்று கொண்டேன். பின்னாடி பேசுபவர்களை பற்றி நான் கவலைப்பட்டது கிடையாது. அதெல்லாம் பார்த்தால் இன்றைக்கு உங்கள் முன்னாடி நான் இப்படி நிற்க முடியாது. எனக்கு உண்மையா வெறுக்க தெரியும், ஆனால் பொய்யாக நேசிக்க தெரியாது. அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை. எனக்கும், என் ரசிகர்களுக்கும் மற்றவர்களை வாழ வைத்து தான் பழக்கம். ரசிகர்கள் மட்டுமே புலி படத்திற்கு மதிப்பெண் தர முடியும். படத்தை தியேட்டருக்கு போய் பாருங்க என்றார். விழாவில், புலி இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை மற்றும் நடனத்துடன், நடன அமைப்பாளர் ஸ்ரீதரின் நடன குழுவினரும் புலி பாடல்களுக்கு ஆடினர். இந்த விழாவில் விஜய் தவிர்த்து, விஜய்யின் மனைவி சங்கீதா, பெற்றோர் ஷோபா மற்றும் சந்திரசேகர், புலி ஹீரோயின்கள் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, நந்திதா, விஜய் சேதுபதி, ஜீவா, கே.எஸ்.ரவிக்குமார், பேரரசு, தரணி, கலைப்புலி தாணு, கதிரேசன், தேனப்பன், டி.ஆர்.ராஜேந்தர், நட்டி என்ற நட்ராஜ், எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் சிம்புதேவன் மற்றும் புலி படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.