டீ, காபி குடிக்கலாமா?
டீ காபி, டீ காபி, டீ காபி என்று சந்தானம் ஸ்டைலில் வாசித்தால் மட்டும் போதாது. அதனை பற்றி சற்று தெரிந்து கொள்ளுங்கள் .
நம்மை அடிமைப்படுத்தியிருந்த ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய தேநீர்,
காபிக்கு இன்றும் நாம் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம்.
டீ,
காபி குடிப்பது உடலுக்கு நல்லதா கெட்டதா?
ஒரு நாளைக்கு எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம்?
யாரெல்லாம் குடிக்கக் கூடாது?
பொதுவாக டீ,
காபி குடிப்பது உடலுக்கு நல்லதல்ல.
அதிலும்,
12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கண்டிப்பாக டீ,
காபி அருந்தக் கூடாது.
புத்துணர்ச்சி கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான் டீ,
காபி குடிக்கிறார்கள்.
ஆனால்,
இதில்,
உடலுக்குக் கெடுதலை ஏற்படுத்தும் காஃபின்
(Caffeine) என்ற ஒரு ரசாயனம் உள்ளது.
இந்த ரசாயனம்தான் அந்த திடீர் புத்துணர்வுக்குக் காரணம்.
இது உடலில் சேரச்சேர பக்க விளைவுகள் அதிகமாகும்.
காஃபின்,
தேநீரில் குறைவாகவும் காபியில் அதிகமாகவும் இருக்கிறது.
இது உடலில் இருக்கும் ஊட்டச் சத்துக்களை அழித்துவிடும் தன்மைகொண்டது.
சர்க்கரை நோய்,
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் காபி,
தேநீரை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
கிரீன் டீ குடிக்கலாம்.
ஒரு நாளைக்கு எவ்வளவு டீ,
காபி குடிக்கலாம்?
உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்துக் குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். தேநீர் 100 மி.லி. அளவும், காபியை அரை டம்ளர் அளவும் ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் குடிக்கலாம்.
உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்துக் குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். தேநீர் 100 மி.லி. அளவும், காபியை அரை டம்ளர் அளவும் ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் குடிக்கலாம்.