கேரள ரசிகர்களுக்கு வாழ்த்து சொன்ன விஜய்..!



                                  கடந்த புதன்கிழமை காலையில் டிவி பார்த்துக்கொண்டிருந்த தமிழ் நேயர்கள், விளம்பர இடைவேளையின்போது அப்படியே மலையாள சேனல்கள் பக்கம் ரிமோட்டை ஒருமுறை அழுத்தி பார்த்திருந்தால் ஷாக்காகி போயிருப்பார்கள்.. காரணம் ஒரு சேனலில் விஜய் நடித்த துப்பாக்கி படமும் இன்னொரு சேனலில் விஜய்யின் கத்தி படமும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருந்தன. விஜய் மலையாளத்தில் பஞ்ச் டயலாக் பேசிக்கொண்டிருந்தார்.. அந்த அளவுக்கு கேரள சேனல்கள் விஜய்யின் படங்களையும் நிகழ்வுகளையும் ஒளிபரப்பினால் டி.ஆர்.பி ரேட்டிங் அதிகமாவதை நன்றாகவே கணித்து வைத்திருக்கின்றன. இந்த ஓணம் திருநாள் கொண்டாட்டத்தின்போது இதுவரை இல்லாத புதுமையாக மலையாள நிகழ்ச்சிகளை தாண்டி, புலி படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒளிபரப்பானதை பார்க்கும்போது இது உறுதியாகி உள்ளது.. காரணம் கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். அந்தவகையில் கேரளா அவருக்கு இரண்டாவது வீடு என்பதால் அங்கிருக்கும் ரசிகர்களை தக்கவைத்துக்கொள்வது விஜய்யின் கடமையல்லவா..? அதனால் தான் கேரள மக்களுக்கு தனது பேஸ்புக் பக்கத்தில் ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதுவும் மலையாள மொழியிலே என்பதுதான் ஹைலைட்.    
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url