விஜய் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த வாலு..!



                                          ஆரம்பத்தில் தன்னை ரஜினி ரசிகராக அடையாளப்படுத்திக் கொண்ட சிம்பு, அதன் பிறகு அதாவது அஜித் தல எடுத்த பிறகு தன்னை அஜித்தின் ரசிகராக காட்டிக் கொள்ள ஆரம்பித்தார். இப்படி தன்னை காட்டிக் கொள்வதன் மூலம் அஜித் ரசிகர்களின் ஆதரவு தனக்குக் கிடைக்கும் என்று சிம்பு கணக்குப்போட்டாரோ என்னவோ, அவரது கணக்குக்கு கைமேல் பலன் கிடைத்தது. அஜித் ரசிகர்கள் மத்தியில் சிம்புவுக்கு ஆதரவு பெருகியது. இது ஒரு பக்கம் இருக்க, வாலு படம் ரிலீஸ் ஆகாமல் பிரச்சனையில் சிக்கியதை அறிந்து தானே வலிய சென்று உதவி செய்தார் விஜய். இதையே சாக்காக வைத்து விஜய்யின் ரசிகர் மன்றத்தலைவரையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு விஜய்யின் புகழ் பாடத்தொடங்கினார் சிம்புவின் அப்பாவான டி.ராஜேந்தர். இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக விஜய்யின் ரசிகர்களும் தங்கள் பங்குக்கு சிம்புவுக்கு ஆதரவு வழங்கினர். அதற்கு முன்புவரை சிம்புவை அஜித் ரசிகர் என்ற அடிப்படையில் அவரை கழுவி ஊற்றிய விஜய் ரசிகர்கள் கடந்த சில வாரங்களாக பாஸிட்டிவ்வாக சிம்புவைப் பற்றி கமெண்ட்ஸ் போட்டனர். இன்று வாலு படம் ரிலீஸ் என்றதும் முதல் காட்சிக்கே தியேட்டருக்கு படை எடுத்தனர் விஜய் ரசிகர்கள். வாலு படத்தின் டைட்டிலில் விஜய்க்கு நன்றி என்று கார்டு போட்டதும் விசில், கை தட்டல் என ஆரவாரம் செய்த விஜய் ரசிகர்கள் அதன் பிறகு கப்சிப். நேரம் ஆக ஆக பேயறைந்ததுபோலாகிவிட்டனராம். அஜித் பேசிய வசனம், அஜித்தின் படப் பாடல், அஜித்தின் கெட்டப் என படம் முழுக்க அஜித் புராணம்தான். தன் அபிமான தலயை தலையில் வைத்துக் கொண்டாடி இருந்தார் சிம்பு. வெறுத்துப்போன விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகரான சிம்புவுக்கு எல்லாம் நம்ம தளபதி உதவி பண்ணலாமா? என்று புலம்பியபடி தியேட்டரைவிட்டு வெளியேறி உள்ளனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad