இளநரை நீங்க மற்றும் நரைமுடி கருப்பாக





இளநரை நீங்க மற்றும் நரைமுடி கருப்பாக



நாட்டு மருந்துக் கடைகளில் வேம்பாளம் பட்டைஎன்று கிடைக்கும். அதை வாங்கிப் பொடி  செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி  வரலாம்.






நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி,  அதிமதுரம்  ஆகியவற்றை சம அளவு  எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம்.     கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து  தலையில் தேய்த்துச் சிறிது  நேரம் ஊறியதும் குளிக்க   வேண்டும். 





சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகியவற்றை  சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய்  எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி  வந்தாலும் குணம் தெரியும்.



சிறிது கருவேப்பிலையை எடுத்து காலையில் தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவும். மருதாணி செம்பருத்தி கருவேப்பிலை முன்றையும் சம அளவில் எடுத்து மையாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் நரைமுடி கருப்பாகி விடும.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url