வதந்தியில் சிக்கிய அர்னால்டு !



                                           சினிமா பிரபலங்களைப்பற்றிய வதந்திகள் பரவுவது சர்வசாதாரணமாகி விட்டது. இப்போது ஹாலிவுட் பிரபலங்களை குறி வைத்து சில வதந்திகள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் உலக அளவில் ரசிகர்களை கவர்ந்து வைத்திருக்கும் ஜாக்கிசான் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டதாக ஒரு செய்தி வைரலாக பரவியது. பின்னர் அது வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹாலிவுட்டின் அதிரடி நடிகரான அர்னால்டும் மாரடைப்பால் மரணமடைந்து விட்டதாகவும் வாட்ஸ்அப்பில் செய்தி பரப்பி விட்டுள்ளனர். ஆனால் அர்னால்டு எந்தவித உடல்நலக்குறைவும் இன்றி நலமாக இருக்கிறார் என்பதுதான் உண்மை. தற்போது 68 வயதாகும் அர்னால்டு, டெர்மினேட்டர், சிக்ஸ்த் டே போன்ற படங்களில் நடித்து உலக ரசிகர்களை கவர்ந்திழுத்தவர். அதோடு இன்றுவரை கட்டுமஸ்தான நடிகர் என்கிற இலக்கணத்துக்குரியவராகவும் தனது உடல்கட்டை பராமரித்து வருகிறார். இந்த நிலையில், ரஜினி நடிக்கHருக்கும் எந்திரன்- 2 படத்தில் அவரை வில்லனாக நடிக்க வைக்கும் முயற்சி நடப்பதாகவும் இன்னொரு செய்தி பல மாதங்களாக கோலிவுட்டில் உலவிக்கொண்டிருக்கிறது. இதுவும் வதந்திதானா? இல்லையா? என்பதும் விரைவில் தெரிந்து விடும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]