ராசியில்லாத கேப்டன் !
காலே டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி சதமடித்தார். இதன்மூலம் இவர், கேப்டனாக பங்கேற்ற முதல் 4 டெஸ்டில், 4 சதம் அடித்த மூன்றாவது கேப்டன் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் இந்தியாவின் கவாஸ்கர், இங்கிலாந்தின் அலெஸ்டர் குக் இச்சாதனை படைத்தனர். இருப்பினும் கோஹ்லி கேப்டனாக சதமடித்த 3 போட்டிகளில் இந்திய அணி ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்டில் (115, 141 ரன்) இந்திய அணி தோல்வி அடைந்தது. சிட்னி டெஸ்ட் (147 ரன்) ‘டிரா’வில் முடிந்தது. தற்போது காலே டெஸ்டில் (103) தோல்வி அடைந்தது. தவிர கோஹ்லி கேப்டனாக செயல்பட்ட 4 டெஸ்டில் இந்திய அணி 2 ‘டிரா’ (எதிர்–ஆஸி., மற்றும் வங்கதேசம்), 2 தோல்வியை (எதிர்–ஆஸி., மற்றும் இலங்கை) பெற்றது. ஒருமுறை கூட வெற்றி பெறவில்லை.
ஆனால் கவாஸ்கர் கேப்டனாக சதமடித்த 4 டெஸ்டில் இந்திய அணி ஒரு வெற்றி, 3 ‘டிரா’வை பெற்றது. அலெஸ்டர் குக் கேப்டனாக சதமடித்த 3 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வென்றது.