"பிகே" சாதனையை முறியடித்த "பாகுபலி" !



                                            பாகுபலி திரைப்படம் வெளிவந்து 3 வாரங்கள் முடிந்து நான்காவது வாரத்தில் வெற்றிகரமாக அடியெடுத் வைத்துள்ளது. இந்த வார முடிவில் இப்படம் சுமார் 500 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிடும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, இதுவரை இந்தியாவில் அதிக வசூலைக் குவித்த படமாக இருந்து வந்த பிகே படத்தின் சாதனையை பாகுபலி படம் முறியடித்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிகே படம் இந்தியாவில் மட்டும் சுமார் 330 கோடிகளை வசூல் செய்து இந்திய வசூல் சாதனையில் முதலிடத்தில் இருந்து வந்தது. தற்போது பாகுபலி படம் சுமார் 340 கோடி ரூபாயை 24 நாட்களில் வசூல் செய்து அந்த சாதனையை முறியடித்துவிட்டதாகத் தெரிவிக்கிறார்கள். சுமார் 480 கோடி வரையில் நேற்று வரையிலான வசூலும், வினியோகஸ்தர்கள் பங்குத் தொகையாக சுமார் 250 கோடி வரையும் படம் வசூலித்துள்ளதாம்.ஹிந்தியில் மட்டுமே நேரடியாக வெளிவந்து வெற்றி பெற்ற ஹிந்திப் படங்கள் அளவிற்கு பாகுபலி படமும் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துவிட்டதாம். தமிழ்நாட்டில் மட்டும் 60 கோடி ரூபாயைக் கடந்துள்ள வசூல் வெளிநாடுகளின் வெளியீடு ஆகியவற்றையும் கணக்கிட்டால் சுமார் 75 கோடி ரூபாயைத் தாண்டியிருக்கும் என்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு மிகப் பெரும் வசூல் இந்தப் படத்திற்குக் கிடைத்துள்ளது தென்னிந்தியத் திரையுலகத்தைப் பற்றி உலகம் முழுவதும் பேச வைத்துள்ளது. இனி இந்தியப் படங்கள் என்றால் ஹிந்திப் படங்கள்தான் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை மாறும் என்பது மட்டும் நிச்சயம். 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]