ஜெயம்ரவி-லட்சுமிமேனன் நடிக்கும் பேய் படம் !


   
                                                          இது கோடம்பாக்கத்தில் பேய் சீசன் என்பதால், பல முன்னணி ஹீரோக்களே பேய் கதைகளை தேடிப்பிடித்து நடித்து வருகின்றனர். அந்த வகையில், ஜெயம்ரவியும் தற்போது மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் படத்தில் ஒரு அமானுஷ்ய கதையில்தான் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியிலுள்ள இயற்கை எழில் மிகுந்த பகுதிகள் மட்டுமின்றி, அங்குள்ள அடர்ந்த காடுகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. அங்கு பெரும்பாலான காட்சிகளை படமாக்குவதற்கு ஒரு பங்களா செட் அமைக்கப்பட்டிருக்கிறதாம். பெரும்பாலும் இரவு நேரங்களில் அதில் படப்பிடிப்பு நடக்கிறதாம். மேலும், இப்படத்தில் ஜெயம்ரவி-லட்சுமிமேனன் இருவரில் யார் பேயாக நடிக்கிறார்கள் என்கிற கேள்விகள் எழுந்து கொண்டிருக்கும் நிலையில், அதுபற்றி அப்படக்குழுவிடம் விசாரித்தபோது, அவர்கள் இருவருமே பேயாக நடிக்கவில்லை என்கிறார்கள். மாறாக, பேய்கள் நிறைந்த ஒரு பகுதியில் அவர்கள் போய் சிக்கிக்கொள்கிறார்கள். அதையடுத்து அதிலிருந்து எப்படி உயிர் தப்பி வெளியே வருகிறார்கள் என்பதுதான் கதை என்கிறார்கள். அந்த வகையில், ஒரு ஹாலிவுட் ஹரார் படம் பார்த்த திருப்தியை இப்படம் கொடுக்குமாம்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]