அஜித்தை அதிரவைத்த அனிருத் !



                                    தமிழ்த் திரையுலகில், அஜித்குமார் முடிசூடா மன்னனாக இருந்துவரும் நிலையில், தற்போது அவருக்கு பிடித்த பாட்டாக, அனிருத் இசையிலான பாடல் உள்ளதாக தகவல் வைரலாக பரவி வருகிறது. அஜி்த்குமார், தற்போது சிறுத்தை, வீரம் உள்ளிட்ட படங்களை இயக்கிய சிவாவின் இயக்கத்தில், தற்போதைக்கு தல 56 என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், தங்கையாக லட்சுமி மேனனும் நடித்து வருகின்றனர். தனுஷ் படங்கள் மற்றும் அவரது தயாரிப்பிலான படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்த அனிருத், கத்தி படத்தின் மூலம் மற்ற நடிகர்களின் படங்களுக்கும் இசையமைக்க துவங்கினார். கத்தி படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு, அனிருத்தை, வேறொரு கட்டத்திற்கு இட்டுச் சென்றது. நான் அஜித் ரசிகன் என்று மற்ற நட்சத்திரங்களை போன்று, அனிருத்தும் கூறிவந்த நிலையில், அவராலேயே நம்பமுடியாத வண்ணம், அஜித்தின் படத்திற்கு இசையமைப்பதற்கான வாய்ப்பு வந்தது. உடனடியாக சம்மதித்ததோடு மட்டுமல்லாது, பின்னணி மற்றும் பாடல்களுக்கு பிரத்யேக இசை என்று அனிருத் மெனக்கெட துவங்கினார். தல 56 படம், தீபாவளி விருந்தாக, ரசிகர்களை மகிழ்விக்க உள்ள நிலையில், அதன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அனிருத், இப்படத்திற்கான பாடல்களை முடித்துக்கொடுத்து விட்டார். அதில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல், அஜித்தை மிகவும் கவர்ந்துவிட்டதாம். இதற்காக, அனிருத்தை நேரில் அழைத்து, அஜித் வாழ்த்து தெரிவித்துள்ளார். அஜித்தின் தல 56 படத்தின் பர்ஸ்ட் லுக்கும், ரஜினியின் கபாலி படத்தின் பர்ஸ்ட் லுக்கும் ஒரே நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தல 56 படத்திற்கு "அடங்காதவன்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும், தகவல் வெகுவேகமாக பரவிவருவது குறிப்பிடத்தக்கது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url