தண்ணீரை சுத்திகரிக்க உதவும் ஆப்பிளும் தக்காளியும்


தண்ணீரை சுத்திகரிக்க உதவும் ஆப்பிளும் தக்காளியும்
சிங்கப்பூரில் உள்ள மல்லம்படி தேசிய பல்கலைக்கழகத்தில் உள்ள Phd மாணவர் நீரில் உள்ள மாசுக்களை நீக்குவதற்காக ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்தார்அவர் தக்காளி மற்றும் ஆப்பிள் தோல்களின் மூலம் நீரில் உள்ள மாசுக்களை அகற்றலாம் என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டார்.


அவர் முதலில் தக்காளியில் ஆராய்ச்சியை தொடங்கினார்ஏனென்றால் தக்காளி உலக மக்கள் அனைவரும் பொதுவாக பயன்படுத்தும் உணவு பொருளாகும்இதிலிருந்து டன் கணக்கில் தோல்விதை மற்றும் நார்கள் வீணாகின்றனஅதனால் முதலில் தக்காளியில் அவரது ஆராய்ச்சியை தொடங்கினார்.



பின்னர் அவர் ஆப்பிள் தோலில் ஆராய்ச்சியை மேற்கொண்டார்ஏனென்றால் ஆப்பிள் பழச்சாறு மற்றும் ஆப்பிள் சாஸ் தொழிற்சாலைகளில் இருந்து தேவையான மூல பொருளை பெறலாம் என்று ஆப்பிளை தேர்வு செய்தார்.

இந்த தோல்களை தண்ணீரில் போட்டால் இது கார்பன் வடிகட்டிகள் போன்று வேலை செய்கிறது என்று கிளீன் டெக்னிக்கா நிறுவனம் விளக்குகிறதுஇந்த தக்காளி மற்றும் ஆப்பிள் தோல்கள் தண்ணீரில் உள்ள அயனிகள் மற்றும் தேவையில்லாத மாசுக்களை ஈர்த்துக் கொள்கின்றனஅதனால் நமக்கு சுத்தமான தண்ணீர் கிடைக்கும் என்று கண்டறிந்துள்ளனர்.



இந்த வகையான தண்ணீர் சுத்திகரிக்கும் முறையானது தண்ணீரை முழுமையாக சுத்தப்படுத்துவதில்லைஆனால் தண்ணீரில் உள்ள மாசுக்களை அகற்றி நாம் பருகும் அளவிற்கு சுத்தப்படுத்தி தருகிறதுஇந்த ஆப்பிள் தோலினால் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் நிலத்தடிநீர்போன்று இருக்கும்மேலும் இந்த தண்ணீர் ஆப்பிளின் சுவை கொண்டதாகவும் இருக்கும்என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த வகை தண்ணீர் சுத்திகரிப்பு முறையானது ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url