மாற்றுத்திறனாளிக்கு உதவி செய்த அஜித்!



                                          திரைக்குப்பின்னால் வெளியில் தெரியாமல் அஜித் உதவி செய்வது அதிகரித்து வருவதாக சொல்கிறார்கள். அதாவது படப்பிடிப்பு தளங்களில் வேலை செய்பவர்களிடம் படம் சம்பந்தமாக மட்டுமே பேசாமல் அவர்களது குடும்பத்தைப் பற்றியும் கேட்டறியும் வழக்கம் கொண்டவர் அஜித்.  அந்த வகையில், உங்கள் பையன் இப்போது என்ன படிக்கிறான்? உங்கள் மகளுக்கு திருமணம் செய்து விட்டீர்களா? என்றெல்லாம் சினிமா தொழிலாளர்களிடம் பர்சனலாகவும் கேட்டறிகிறாராம். அதையடுத்து, உங்களுக்கு ஏதாவது பணஉதவி வேண்டுமானால் கேளுங்கள் என்றும் கேட்டறிந்து, தேவைப்பட்டால் அவர்களுக்கு உதவியும் செய்கிறாராம் அஜித். இந்நிலையில், சமீபத்தில் ஒருநாள்அவர் படப்பிடிப்பில் இருந்தபோது, கால் நடக்க முடியாத ஒரு மாற்றுத்திறனாளி அஜித்தை சந்திக்க வந்தாராம். அப்போது தன்னிடம் ஒரு மூன்று சக்கர வண்டி வாங்குவதற்குகூட வசதி இல்லை என்று சொன்னாராம். அதையடுத்து, நாளை ஈவினிங் 4 மணிக்கு இதே இடத்துக்கு வாருங்கள் என்று அவரை அனுப்பி விட்ட அஜித், அடுத்தநாள் அதேநேரத் துக்கு அவர் வந்தபோது மூன்று சக்கர சைக்கிளை கொடுத்தாராம். அப்போது அந்த நபர் அஜித்தை கட்டிக்கொண்டு ஆனந்த கண்ணீர் விட்டாராம். பின்னர், அவருக்கு ஒரு கவரில் பணம் வைத்துக்கொடுத்து அனுப்பி வைத்தாராம் அஜித். இதுபோன்று சத்தமில்லாமல் ஏராளமான உதவிகளை செய்து வருகிறாராம் அஜித். 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad