ரஜினிகாந்த் படத்தின் பெயர் கபாலி; அதிகாரப்பூர்வ அறிவிப்பு !



                                                 எஸ்.தாணு தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடிக்க உள்ள புதிய படத்திற்கு "கபாலி" எனப் பெயரிட்டுள்ளதாக படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் சற்று முன் அவருடைய டிவிட்டர் வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாகவே கண்ணபிரான், கபாலி என இரண்டு பெயர்கள் அந்தப் படத்திற்கு வைக்கப்படும் என பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த நிலையில் இயக்குனர் ரஞ்சித்தே படத்தின் பெயரை அறிவித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் மலேசியாவில் தொடங்க உள்ளது. மற்ற நட்சத்திரத் தேர்வுகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு குறுகிய காலத்தில் நடைபெற்று முடிய உள்ளது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு முன்பாகவே படம் வெளியாக வாய்ப்புள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]