ஒவ்வொரு விதமான சருமத்திற்கும் ஏற்ற ஃபேஸ் வாஷ்…!
சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முகத்தை தினமும் பல முறை கழுவ வேண்டியது அவசியம். அப்படி கழுவும் போது சோப்பைப் பயன்படுத்தாமல், ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது தான் சிறந்தது. ஆனால் நம் சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் வாஷ்ஷை எப்படி தேர்ந்தெடுப்பது என்று பலரும் தெரியாமல் இருப்பார்கள். பொதுவாக ஃபேஸ் வாஷ் வாங்கும் முன், நம் சரும வகையை மனதில் கொண்டு பின் வாங்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான சரும வகை இருக்கும். அந்த சரும வகைக்கு ஏற்றவாறான ஃபேஸ் வாஷை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி வந்தால், சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
எண்ணெய் பசை சருமம் :
எண்ணெய் பசை சருமத்தினருக்கு முகப்பருக்கள் அதிகம் இருக்கும். எனவே பருக்களைப் போக்கும் வகையிலும், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி, சரியான அளவில் எண்ணெய் பசையைப் பராமரிக்கவும் ஏற்றவாறான ஃபேஸ் வாஷைப் பயன்படுத்த வேண்டும்.
அதற்கு ஃபேஸ் வாஷில் சாலிசிலிக் ஆசிட் அல்லது பென்சோயில் பெராக்ஸைடு உள்ளதாக என பார்த்து பின் பயன்படுத்துங்கள்.
காம்பினேஷன் சருமம் :
காம்பினேஷன் சருமம் உள்ளவர்களுக்கு ஃபேஸ் வாஷ் பொருந்துவது சருமம். ஏனெனில் இத்தகையவர்களுக்கு T-zone பகுதியில் எண்ணெய் பசை அதிகமாகவும், மற்ற பகுதியில் வறட்சியாகவும் இருக்கும்.
எனவே இத்தகையவர்கள் பால், சாலிசிலிக் ஆசிட் அல்லது பென்சோயில் பெராக்ஸைடு போன்றவை கலந்த ஃபேஸ் வாஷைப் பயன்படுத்துவது நல்லது.
வறட்சியான சருமம் :
வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு, அதிக அளவில் சரும வறட்சி ஏற்படுவதால், பால், க்ரீம் அல்லது எண்ணெய் கலந்த ஃபேஸ் வாஷைப் பயன்படுத்துவது வறட்சியைப் போக்கி, சருமத்தில் எண்ணெய் பசையைப் பராமரிக்கவும் உதவும்.
சென்சிடிவ் சருமம் :
சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள், எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரிக் ஆசிட் கலந்த ஃபேஸ் வாஷைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அவை சருமத்தை வெகுவாக பாதிக்கும்.