"Audi TT " ஸ்போர்ட்ஸ்காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது ஆடி !!
3-ஆம் தலைமுறை டிடி காரான இது ஃபோக்ஸ்வாகன் குழுமத்தின் MQB கட்டுமானத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு விற்பனையில் இருக்கும் 45TFSI மாடலில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் உள்ளது. 230 hp சக்தியையும், 37.72 kgm டார்க்கையும் அளிக்கிறது இந்த இன்ஜின். வெளிநாடுகளில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் உண்டு. இந்தியாவில் 6-ஸ்பீடு DSG டிரான்ஸ்மிஷன்-தான். 0-100 கிமீ வேகத்தை 5.3 நொடிகளில் அடைகிறது புதிய டிடி. டாப் ஸ்பீடு மணிக்கு 253 கிமீ. மேலும் 12.3 இன்ச் TFT ஸ்க்ரீன், NVIDIA Tegra 3 கிராபிக்ஸ் பிராசஸர் கொண்ட Virtual Cockpit சிஸ்டம் 2015 டிடி காரில் அறிமுகமாகிறது.