ரூ. 250 கோடியில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட ராஜமவுலியின் பாகுபலி படம் ரூ. 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்திருக்கிறது. அதனால் பாகுபலி படத்தின் 2-ம் பாகமும் 250 கோடிக்குமேல்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த படத்தைத் தொடர்ந்து 950 கோடியில் ஹாலிவுட் படங்களையே மிஞ்சும் பட்ஜெட்டில் மகாபாரதம் கதையை இயக்க ராஜமவுலி முடிவு செய்திருப்பதாக பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன. ராஜமவுலியின் கனவு படமான இந்த மகாபாரதம் படத்தில் ஜூனியர் என்டிஆரை நாயகனாக நடிக்க வைக்க ஏற்கனவே பேசி வைத்திருக்கிறாராம். மேலும், அப்படி 950 கோடி பட்ஜெட்டில் மகாபாரதத்தை படமாக்கினால் அது ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடக்கூடிய படமாக இருக்கும் என்பதால் உலக அளவில் பல மொழிகளில் அந்த படத்தை இயக்குவதோடு ஹாலிவுட்டின் சில பிரபலங்களையும் அந்த படத்தில் நடிக்க வைக்கவும் ராஜமவுலி திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.