பொருமையை சோதிக்கும் "தல 56" படக்குழு!!



                      இளைய தளபதி விஜய்யின் புலி பட டிரெய்லர் ஒரு வழியாக நள்ளிரவு 12 மணிக்கு வெளியாக தயாராகிவிட்டது. படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்புகளும் வந்தாகி விட்டன. இந்நிலையில் பல பெரிய ஹீரோக்களின் படங்கள் ரகசியமாக வைக்கப்படுவது நாமறிந்ததே. ஆனாலும் இந்த ரகசியம் கொஞ்சம் ஓவர் பாஸ் என்றே சொல்லத் தோன்றுகிறது. அஜித் படத்தின் தலைப்பை வெளியிடுவதையே அவரது ரசிகர்கள் விழாவாக கொண்டாடி வரும் நிலையில், படத்தின் தலைப்பு முதல் எழுத்து ‘V’ என வினாடி வினா ஸ்டைலில் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. வெட்டிவிலாஸ் என அங்காங்கே பரவி வந்தாலும் இப்படி ஒரு பெயர் வைப்பார்களா என்ற கேள்விகளும் மனதில் தோன்றத்தான் செய்கின்றன. ரசிகர்களை கொஞ்சம் அதிகமாகவே சோதிக்கின்றனர் தல பட டீம். இந்நிலையில் செப்டம்பர் முதல் வாரத்தில் படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகும் என செய்திகள் உலவி வருகிறது. அப்போதாவது வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]