சூர்யா நடிக்கும் பசங்க-2 !



                                           சிம்பு-நயன்தாரா நடிப்பில் இது நம்ம ஆளு படத்தை இயக்கி வந்த டைரக்டர் பாண்டிராஜ், அந்த படம் பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கிக்கொண்டதால், அதையடுத்து சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் ஹைக்கூ என்ற படத்தை இயக்கினார். பிந்துமாதவி லீடு ரோலில் நடித்த அந்த படத்தில் சூர்யா-அமலாபால் இருவரும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். இப்படமும் அவர் இதற்கு முன்பு இயக்கிய பசங்க, மெரினா படங்களைப்போன்று சிறுவர்களை மையப்படுத்திய படம் என்பதால், அதற்கு ஹைக்கூ என்று பெயர் வைத்திருந்தார். ஆனால் இப்போது படம் ரிலீசுக்கு தயாராகி விட்ட நிலையில், அந்த டைட்டிலுக்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்காது என்கிறார்களாம். அதனால் பல டைட்டில்களை பரிசீலனை செய்து வந்த பாண்டிராஜ், இப்போது ஹைக்கூ படத்துக்கு பசங்க-2 என்றே பெயர் வைத்து விட்டார். இந்த தகவலை அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டதோடு, அப்படத்தின் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். மேலும், பசங்க-2 என்ற டைட்டில் ஏற்கனவே விஜய்மில்டன் இயக்கத்தில் வெளியான கோலிசோடா படத்திற்குதான் முதலில் வைக்கப்பட்டிருந்தது. அந்த படத்திற்கு பாண்டிராஜ்தான் வசனம் எழுதினார். ஆனால், கடைசி நேரத்தில் பசங்க-2 டைட்டிலை விஜய்மில்டன், கோலிசோடாவாக மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]