சிறுநீர்ப் பையிலே ஏற்படும் நோய்கள்(Urinary Track Infection),(Hematuria) சிறுநீரோடு இரத்தம் கலந்து வருதல் மற்றும் ஆண்களின் மலட்டுத் தன்மையை குணமாக்கும் காட்டு கஸ்தூரி
காட்டுகஸ்தூரி (லதாகஸ்தூரிகா)
(Abelmoschus Moschatus)
தன்மை
கசப்பு மற்றும் இனிப்புச் சுவை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. விந்தணுக்களின் எண்ணிக்கையை(Sperm Counting) அதிகப்படுத்தும். அதன் பயணத் தன்மையை(Sperm Motivation) அதிகரிக்கும். இலேசானது. கண்களுக்கு ஒரு அருமருந்தாக செயல்படுகிறது. மலமிளக்கியாக பயன்படும்.
கபத்தைப் போக்கும். நாவறட்சி என்னும் நீர்ச்சத்து குறைந்து போகும் நிலையை குணமாக்கும். முகப்பரு, கரும்புள்ளி முதலிய முக சம்பந்தமான நோய்களை குணமாக்கும். சிறுநீர்ப் பையிலே ஏற்படும் நோய்கள்(Urinary Track Infection) பாக்டீரியாவால் ஏற்படும் தொற்று (அ) சிறுநீரகக் கற்களால் ஏற்படும் புண்கள் , (Hematuria) சிறுநீரோடு இரத்தம் கலந்து வருதல், (Anti-Microbial) நுண் கிருமிகளை வெளித்தள்ளும். சிறுநீரகத்தை பலப்படுத்தும். அனைவருக்கும் பயன்தரக்கூடிய ஒரு மருந்தாக அமையும்.