மூலிகை டீ (Rejuvenate and Tasty Herbal Tee)
தேவையான பொருள்கள்
- அதிமதுரம் --- 1 டீ ஸ்பூன்
- சித்தரத்தை --- 1 டீ ஸ்பூன்
- சுக்கு --- 1 டீ ஸ்பூன்
- கடுக்காய் தோல் --- 2 துண்டுகள்
- ஏலக்காய் --- 2
- மிளகு --- 1/4 ஸ்பூன்
- துளசி இலை --- 10
- பால் --- 3/4 கப்
- தேயிலைத்தூள் --- 1 டீ ஸ்பூன்
- சர்க்கரை --- 1 டீ ஸ்பூன்
- அதிமதுரம், சித்தரத்தை, சுக்கு, கடுக்காய்த்தோல், ஏலக்காய், மிளகு எல்லாவற்றையும் வெறும் வாணலியில் வறுத்து பொடிக்கவும்.1 கப் தண்ணீரை அடுப்பில் வைத்து இந்தப் பொடியில் 1/2 டீ ஸ்பூன் போட்டு , துளசி இலைகளுடன் கொதிக்கவிடவும். 2 நிமிடங்கள் கொதித்ததும் , தேயிலைத்தூள் சேர்த்து , அடுப்பை அணைத்து மூடி வைக்கவும்.
- 1 நிமிடம் கழித்து வடிகட்டி சூடான பால், சர்க்கரை (அ) பனைவெல்லம் சேர்த்து அருந்தலாம். பால் சேர்க்காமலும் அருந்தலாம்.
பயன்கள்
ருசியான மூலிகை டீ. சுறுசுறுப்பு கிடைக்கும். மூலிகை டீ அருந்தினால் தொண்டை சளி போகும். ஜீரண சக்தி கிடைக்கும். புத்துணர்ச்சி கிடைக்கும்.