மஞ்சள் காமாலை(Jaundice), வெள்ளைப்போக்கு(Leukemia) மற்றும் Heart Attack-லிருந்து பாதுகாக்கும் கீழாநெல்லி(Phyllanthus Niruru)
கீழாநெல்லி(பூம்யாமலகீ)
(Phyllanthus Niruru)
தன்மை
இது துவர்ப்பு, இனிப்பு மற்றும் கசப்புச் சுவை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. வாதத்தை தோற்றுவிக்கக்கூடியது. ஈரலை பலப்படுத்தும்.
தீர்க்கும் நோய்கள்
இது நாவறட்சியை போக்கும். இருமல், பித்தம், இரத்ததோஷம், அரிப்பு மற்றும் மார்புக்குள் பட்ட காயம் குணமாகும். முக்கியமாக ஈரலை பாதுகாக்கும். Strong Anti-Viral Agent-ஆக செயல்பட்டு ஈரலை பாதுகாக்கும்.
இதன் இலைசாறு(2 ஸ்பூன்) மற்றும் உப்பு(1 சிட்டிகை) சேர்த்து, Scabies Infection(சொறி) உள்ள இடத்தில் தொடர்ச்சியாக தேய்த்து வர, நமைச்சல் குறைந்து, படிப்படியாக குணமாகும்.Anti-Fungal and Anti-Bacterial-ஆக செயல்படும்.
இதன் இலைபசை(நெல்லிக்காய் அளவு (அ) 20 கிராம்), புளிப்பு இல்லாத தயிர்(அ) மோர், மஞ்சள்(வெருக்கடி அளவு) மற்றும் தண்ணீர் சேர்த்து, காலை வெறும் வயிற்றில் எடுத்து வர, மஞ்சள் காமாலை குணமாகும்.
இந்த கீழாநெல்லியுடன், மஞ்சள் சேர்த்து சாப்பிட, சர்க்கரை நோய்க்கு(Anti-Diabetic) மருந்தாக அமைகிறது. (Hypoglycemic) இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டு வரும்.
உடல் வெப்பத்தைக் குறைக்கும். நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள, மாதம் இருமுறை இதை எடுத்துக் கொள்ளலாம். இரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்து(Anti-Lipid) மட்டுப்படும். ஒரு மண்டலம் எடுத்து வர, LDL குறைந்து , HDL அதிகரிக்கும். இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுத்தி, மாரடைப்பு(Preventive Medicine), ஏற்படும் நிலையை குணமாகும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் கீழாநெல்லி பசை (சமூலம்) சேர்த்து, நன்றாகக் காய்ச்சி, வடிகட்டி வைத்து, தினமும் தலைக்கு ஒரு 1/2 மணி நேரம் தேய்த்து குளித்து வர இளநரை குறைந்து போகும். அதே போன்று உள்ளுக்கும் சாப்பிட கீழ்க்கண்ட முறையை பயன்படுத்த வேண்டும்.
நெல்லிக்காய்(2), கீ.இலை(1 பிடி) மற்றும் பனைவெல்லம் சேர்த்து காய்ச்சி குடித்து வர, இரத்த சோகை குணமாகும். உடல் உஷ்ணம் தணியும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். இளநரை மறையும். சிறுநீரகம் பலப்படும். இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். Leukemia எனும் வெள்ளைப்போக்கு(கருப்பை அழற்சியினால் ஏற்படும் கருப்பை புண்களில் இருந்து ஒழுக்கு ஏற்படும் நிலை) குணமாகும்.