Huawei Honor 4A With Android 5.1 Lollipop !
ஹவாய் நிறுவனம் அதன் ஹானர் பிராண்டின் கீழ் ஹானர் 4ஏ என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் 3ஜி வகை CNY 599 (சுமார் ரூ.6,100) மற்றும் 4ஜி எல்டிஇ வகை CNY 699 (சுமார் ரூ.7,200) விலையில் மட்டுமே நுழைவு நிலையில் வழங்குகிறது. மேலும், சீனாவின் வெளிப்புறத்தில் விற்பனை செய்வது பற்றி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
டூயல் சிம் ஆதரவு கொண்ட ஹவாய் ஹானர் 4ஏ ஸ்மார்ட்போனில் நிறுவனத்தின் எமோசன் UI 3.1 ஸ்கின் கொண்டு ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குகிறது. ஹவாய் ஹானர் 4ஏ ஸ்மார்ட்போனில் 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் ஹச்டி டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் Adreno 304 ஜிபியூ மற்றும் 2ஜிபி ரேம் உடன் இணைந்து 1.1GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 210 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.
இதில் விரிவாக்கக்கூடிய சேமிப்பு இல்லாமல் 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. ஹவாய் ஹானர் 4ஏ ஸ்மார்ட்போனில் 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இந்த கைப்பேசியில் 2200mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது.
ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi 802.11 b/ g/ n, ப்ளூடூத், ஜிஎஸ்எம், 3ஜி மற்றும் யூஎஸ்பி இணைப்பு ஆகியவை வழங்குகிறது. இது வெள்ளை வண்ணத்தில் கிடைக்கும். மேலும், இதில் காம்பஸ்/மக்னேடோமீட்டர், ப்ரொக்ஷிமிட்டி சென்சார் மற்றும் அம்பிஎண்ட் லைட் சென்சார் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.
ஹவாய் ஹானர் 4ஏ ஸ்மார்ட்போன் விவரக்குறிப்புகள்:
. டூயல் சிம்,
. 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் ஹச்டி டிஸ்ப்ளே,
. 2ஜிபி ரேம்,
. 1.1GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 210 ப்ராசசர்,
. 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
. 8 மெகாபிக்சல் பின்புற கேமரா,
. 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
. Wi-Fi 802.11 b/ g/ n,
. ப்ளூடூத்,
. ஜிஎஸ்எம்,
. 3ஜி,
. யூஎஸ்பி,
. ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப்,
. 2200mAh பேட்டரி.