சோனி எக்ஸ்பீரியா C 4 !
சோனி நிறுவனத்தின் இரண்டு சிம் ஸ்மார்ட் போன் எக்ஸ்பீரியா சி4 டூயல், அண்மையில் ரூ. 29,490 அதிக பட்ச விலையாக நிர்ணயம் செய்யப்பட்டு, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது செல்பி போட்டோ எடுப்பதை முக்கிய வசதியாகத் தருகிறது. முன்புறக் கேமரா 25 மிமீ வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்து தரப்பட்டுள்ளது. இதன் திறன் 5 மெகா பிக்ஸெல் ஆகும். திரை 5.5 அங்குல அளவில் (1920 x 1080 பிக்ஸெல்கள் திறனுடன்) உள்ளது. Full HD IPS display with Mobile BRAVIA Engine 2 இயங்குகிறது. ஸ்கிராட்ச் ஏற்படாத வகையில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் ஆக்டா கோர் மீடியா டெக் ப்ராசசர் 1.7 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படுகிறது. இதில் ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. இதன் பின்புறக் கேமரா 13 எம்.பி. திறன் கொண்டு, எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்து தரப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 2 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை அதிகப்படுத்த ஸ்லாட் கிடைக்கிறது. பேட்டரி 2,600 mAh திறன் கொண்டது. நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி எல்.டி.இ. தொழில் நுட்பம் இயங்குகிறது. இதன் பரிமாணம் 150.3 x 77.4 x 7.9 மிமீ. எடை 147 கிராம். எப்.எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கிடைக்கின்றன. நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, 3ஜி, வை பி, புளுடூத் 4.1, ஜி.பி.எஸ். மற்றும் என்.எப்.சி. ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.
இதன் பேட்டரி 2,600 mAh திறன் கொண்டது. கருப்பு, வெள்ளை மற்றும் மின்ட் வண்ணங்களில் இந்த மாடல் போன் கிடைக்கிறது.