பற்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் நீர்க்கடுப்பை குணமாக்கும் அருமருந்து
முள்ளங்கி
(Radish (Raphanus sativus))
இது குளிர்ச்சித் தன்மை கொண்டது. கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் பற்களில் இரத்தம் வடிதல் நிற்கும். மூட்டு வலி குணமாகும்.
- முள்ளங்கி(நறுக்கியது, 2 முதல் 3 ஸ்பூன் ), உளுத்தம்பருப்பு(1 டீ ஸ்பூன்), கடலைப்பருப்பு(1 டீ ஸ்பூன்), காய்ந்த மிளகாய் வத்தல்(5), நல்லெண்ணெய்(தேவையானது), உப்பு, புளி,கறிவேப்பிலை, கடுகு மற்றும் பெருங்காயத்தூள்.
- முதலில் முள்ளங்கியை மஞ்சள் கலந்த நீரில் நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு வெறும் வாணலியில் இட்டு வதக்க வேண்டும். தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- வாணலியில் 1 டீ ஸ்பூன் அளவு ந.எண்ணெய் விட்டு காய்ச்சி , கடுகு சேர்த்து தாளித்து கொள்ள வேண்டும். காய்ந்த மிளகாய் வத்தல் கிள்ளிப் போட வேண்டும். பொன்னிறமாக வறுத்த மிளகாய் வத்தலுடன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, உப்பு, தேவையான அளவு புளி மற்றும் சிறிது பெருங்காயம் சேர்த்துக் கிளறி எடுத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முள்ளங்கியுடன் சேர்த்து, அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- மற்றொரு வாணலியில் ந.எண்ணெய்(2 தேக்கரண்டி) விட்டு காய்ச்சி, சிறிது கறிவேப்பிலை சேர்த்து, பொன்னிறமாக வதக்கி, அரைத்த முள்ளங்கி விழுதை சேர்த்து கிளறி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- தினந்தோறும் சாதத்தில் பிசைந்து சாப்பிட பல்நோய்கள் அனைத்தும் குணமாகும். பற்களில் சீழ் வடிதல், இரத்தக் கசிவு உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகள் குணமாகும்.
- நீர்கடுப்பு நீங்குவதற்கு, மஞ்சள் நீரில் கழுவி எடுத்த 1 தேக்கரண்டி முள்ளங்கி வில்லைகள், மிளகு(5) மற்றும் 200 மில்லி நீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து, வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். உடல் உஷ்ணத்தால் ஏற்படும் நீர்க்கடுப்பு, நாளடைவில் சிறுநீரகக் கோளாறுகளை உண்டு பண்ணும். அதற்கு இந்த மருந்து ஒரு நல்ல நிவாரணி ஆகும்.