ரஜினிக்கு வில்லன் ஜே.டி.சக்கரவர்த்தி.?


                                                        கலைப்புலி தாணுவின் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தில் பிரகாஷ்ராஜ் நடிப்பதாக செய்தி வெளியானது. இது குறித்து பிரகாஷ்ராஜிடம் கேட்டபோது அதை அவர் உறுதி செய்தார். எனவே பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் ரஜினிக்கு வில்லனாக பிரகாஷ்ராஜ்தான் நடிக்கிறார் என்று நினைத்தவேளையில் திடீர் திருப்பமாக அந்த வேடத்துக்கு வேறு ஒருவரை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிரகாஷ்ராஜ் மட்டுமின்றி வில்லன் வேடத்துக்கு வேறுபல நடிகர்களும் பரிசீலனையில் இருந்துள்ளனர்.  இந்த நிலையில் வில்லன் வேடத்துக்கு இப்போது தெலுங்கு நடிகர் ஜே.டி.சக்ரவர்த்தி தேர்வாகியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஜீவா நடித்த கச்சேரி ஆரம்பம் , ஆர்யா நடித்த  சர்வம், விக்ரம் பிரபு நடித்த  அரிமா நம்பி  மற்றும் சமீபத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான மலையாள படம்  பாஸ்கர் தி ராஸ்கல்  ஆகிய படங்களில் ஜே.டி.சக்ரவர்த்தி வில்லனாக நடித்திருந்தார். தற்போது வில்லனாக நடித்தாலும் ஒருகாலத்தில் தெலுங்கில் முன்னணி ஹீரோவாக கலக்கியவர்தான்  ஜே.டி.சக்ரவர்த்தி. குறிப்பாக ராம்கோபால்வர்மாவின் படங்களில் நடித்துள்ள ஜே.டி.சக்கரவர்த்தி, சத்யா என்ற படத்தில் நடித்தபோது பெரிய அளவில் பேசப்பட்டவர். பின்னர் அவரது படங்கள் வரிசையாக தோல்வியடைந்ததினால் மார்க்கெட் போனது. அதன் பிறகு வில்லனாக நடிக்க ஆரம்பித்தார்.ரஜினியுடன் வில்லனாக  சக்கரவர்த்தி மோதவிருக்கிறார் என்பது உறுதியானாலே அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் தேடி வர வாய்ப்பிருக்கிறது.  இப்படத்தில் ரஜினி டான் ஆக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad