Matrimony OTT-Platforms Jobs Coupons Business

சுரேஷ் ரெய்னா திருமணம்: தோனி நேரில் சென்று வாழ்த்து !





                                                  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னாவுக்கு 01-07-2015 திருமணம் நடைபெற்றது. தனது சிறுவயது தோழியான பிரியங்கா சவுத்ரியை  டெல்லி லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெற்ற திருமண விழாவில் அவர் கரம் பிடித்தார்.  இந்த திருமண விழாவுக்கு இந்திய கேப்டன் தோனி தனது மனைவி சாக்சியுடன் கலந்து கொண்டு நேரில் வாழ்த்தினார். அதேபோல், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சேர்மன் என். சீனிவாசன், விரேந்திர சேவாக், பிராவோ, ஸ்டீபன் பிளமிங், இந்திய அணியின் துனை கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, உள்பட இந்திய அணியின் கிரிக்கெட் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே சுரேஷ் ரெய்னாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad