மாரி படத்தில்தான் நான்தான் ஹீரோ... - தனுஷ் காதுக்கு வந்த ரோபோ சங்கரின் கமெண்ட்...
திறமைசாலிகளை வளர்த்துவிடுபவர்கள் திரைத்துறையில் மிகவும் குறைவு. திறமையாளர்களைத் தேடிப்பிடித்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை முன்னேற வைக்க வேண்டும் என்று நினைப்பவர் தனுஷ். இசையமைப்பாளர் அனிருத் அவருக்கு மனைவி வழி உறவினர் என்றாலும், அனிருத்திடம் இருந்த இசைத்திறமையை கணித்து 3 படத்தில் அவரை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார். அது மட்டுமல்ல தொடர்ந்து தான் நடிக்கும் படங்களுக்கு அனிருத்தையே இசையமைப்பாளராக பணிபுரிய வைக்கிறார். தனுஷின் தொடர் வாய்ப்பு காரணமாக அனிருத்தின் மார்க்கெட் உச்சத்துக்குப் போய்விட்டது. அதேபோல் சிவகார்த்திகேயன். விஜய் டிவியின் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயனின் திறமையை உணர்ந்து 3 படத்தில் காமெடியனாக அறிமுகம் செய்தார் தனுஷ். அதோடு சிவகார்த்திகேயனை வைத்து மான்கராத்தே, காக்கி சட்டை படங்களையும் தயாரித்தார். தனுஷினால் உயர்நிலையை அடைந்த சிவகார்த்திகேயன், அனிருத் இருவருமே இன்னமும் அவரை நன்றியுடன் நினைவுகூர்கின்றனர். சின்னத்திரையில் காமெடி பண்ணும் ரோபோ சங்கர் என்ற காமெடியனுக்கு மாரி படத்தில் காமெடியன் வாய்ப்புக் கொடுத்தார் தனுஷ். மாரி வெளியான அடுத்த நாள் ஒரு தண்ணிப்பார்ட்டியில் தன் நண்பர்களுடன் ஜாலியாகப் பேசிக்கொண்டிருந்தபோது, “மாரி படத்தில் நான்தான் ஹீரோ... காமெடியனா தனுஷ் நடித்திருக்காப்புல. மாரி படத்தில் தனுஷுக்கு நான் நிறைய ஸ்பேஸ் குடுத்துருக்கேன்! நல்லா வருவாப்புல!!” எனறு கமெண்ட் அடித்திருக்கிறார். இந்த கமெண்ட்டை அப்படியே செல்போனில் ரெக்கார்டு பண்ணி வாட்ஸ்அப்பில் தனுஷுக்கு அனுப்பி வைத்துவிட்டனர். ரோபோ சங்கர் தன்னைப் பற்றி அடித்த கமெண்ட்டைக் கேட்ட தனுஷ் செம கோபமாகிவிட்டாராம்.