பெண் வேடத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்.?!
நடிகர்கள் தங்களின் மானேஜரை முன்னிலைப்படுத்தி சொந்தப்படம் எடுப்பது புதிய விஷயமில்லை. இந்த வரிசையில் சிவகார்த்திகேயனும் சேர்ந்துவிட்டார். சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் ஆர்.டி.ராஜா. சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களின் புரொமோஷன், வியாபார விஷயங்கள் தொடங்கி பல விஷயங்களை ஆர்.டி.ராஜாதான் கவனித்து வருகிறார். இந்நிலையில் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனுக்கும், ஆர்.டி.ராஜாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து மதனுக்கு தருவதாக இருந்த கால்ஷீட்டை கேன்சல் பண்ணினார் சிவகார்த்திகேயன். இனி சொந்தப்படத்தில் நடிப்பது என தீர்மானித்து "24 AM STUDIOS"என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். இந்த கம்பெனியின் முதல் தயாரிப்பாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார் ஆர்.டி.ராஜா! இந்த படத்தை அட்லியின் அசிஸ்டென்ட் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். ஷங்கரின் 'ஐ' படத்தில் பங்குபெற்ற வீடா ஒர்க் ஷாப் நிறுவனம் இந்த படத்தின் ஒப்பனை விஷயங்களை கவனிக்கிறது. ஆஸ்கார் விருது பெற்ற ஒப்பனையாளரை அழைத்து வந்தது ஏன்? இந்தப்படத்தின் பெரும்பாலான காட்சிகளில் பெண்ணாக நடிக்கிறாராம் சிவகார்த்திகேயன். அதனால் தான் வீடா வொர்க் ஷாப்பை பெரும் சம்பளம் கொடுத்து அழைத்து வந்துள்ளதாக தகவல்.