ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக எமி ஜாக்சன் !






                                               தமிழ்த் திரையுலகில் இதுவரை தனுஷுக்குத்தான் அதிக மச்சம் என்பார்கள். இப்போது தனுஷ் இடத்தை சீக்கிரமே ஜி.வி.பிரகாஷ் பிடித்து விடுவார் போலிருக்கிறது. இதனால்தான் ஜி.வி.யை தன் எதிரியாக சமீப காலமாக தனுஷ் நினைக்கிறார் போலிருக்கிறது. 'ரோமியோ ஜுலியட் படத்திற்குப் பிறகு மெட்ராஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்க உள்ள புதிய படத்தை இயக்குனர் விஜய்யின் இரண்டு உதவி இயக்குனர்கள் இணைந்து இயக்க உள்ளார்களாம். இந்தப் படத்தில்தான் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கப் போகிறாராம். இயக்குனர் வெற்றிமாறனின் கதைக்கு 'ராஜா ராணி இயக்குனர் அட்லீ வசனம் எழுதுகிறார். தனுஷ், ஜி.வி.பிரகாஷை எதிரியாகவே நினைக்க ஆரம்பித்து அடுத்த வெற்றிமாறனுடன் இணைய உள்ள படத்திலும் இசையமைப்பில் இருந்து ஜி.வி.யை தூக்கிவிட்டு அனிருத்தை ஒப்பந்தம் செய்யச் சொல்லியிருக்கிறார். இருந்தாலும் ஜி.வி.யுடனான நட்பைத் தொடரும் விதத்தில் வெற்றிமாறன் அவருக்காக கதையை கொடுத்திருக்கிறார்.விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]