நரம்புக் கோளாறுகள் மற்றும் ஆண்மைத் தன்மையை பலப்படுத்தும் குக்குலு
குக்குலு(குக்குலு)
(Commiphora Wightii)
தன்மை
இது கைப்பு, துவர்ப்பு மற்றும் கார்ப்புச் சுவைகள் கொண்டது. பக்குவமடையும்போது கார்ப்புச்சுவை தரும். வறட்சித் தன்மை கொண்டது. இலேசானது. உஷ்ணத்தன்மை கொண்டது. பித்தத்தை தோற்றுவிக்கும். மலமிளக்கியாக செயல்படும். குரல் தெளிவு பெரும். இரசாயனத் தன்மை கொண்டது. அக்னி பலத்தை வளர்க்கும்.
தீர்க்கும் நோய்கள்
முறிந்த எலும்பை சேர்க்கும். விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். குட்டம் குணமாகும். கபம், வாதம் மற்றும் விரணம் குணமாகும். Anti-Lipid-ஆக செயல்பட்டு எல்.டி.எல்-ஐ குறைத்து, எச்.டி.எல்-ஐ அதிகரிக்கும். நீரிழிவு குணமாகும். ஆமவாதம் என்று சொல்லக்கூடிய, செரிமான மந்த நிலையை குணப்படுத்தும். புண்களில் சீழ்கட்டி இருந்தால் குணமாகும். நரம்புக் கோளாறுகள், நரம்பு முடிச்சுக்களை சரிசெய்யும். வீக்கம் குறையும். கிருமி நோய் குணமாகும்.