நடிகர் ஜாக்கிசானுடன் இணையும் காத்ரீனா கயூப்





                                                 இந்தியா- சீனா கூட்டு தயாரிப்பில் எடுக்கபோகும் படம் குங் பூ யோகா. இந்த படத்தில் பிரபல நடிகர் ஜாக்கி சான் நடிக்கிறார். இது இரண்டாவது பேரரசர் பிம்புசாரர் காலத்திய கதை.இவர் கிமு 542 முதல் கிமு492 வரை  உள்ள மகத பேரரசராக இருந்தார். இது ஒரு புதையல் வேட்டையை பற்றிய கதையாகும். இவர் சிறந்த  கலாச்சார சாதனைகள் நிகழ்த்தியவர். இவரது சிறந்த நண்பர் கவுதம் புத்தரின் பாதுகாவலராக இருந்தார். என்பது குறிப்பிடதக்கது. இந்த படம் ஒரு ஆக்‌ஷன் படம் ஆகும்.

                                                தற்போது இந்த படத்தில் நடிக்க பாலிவுட் நடிகை காத்ரீனா கயூப்  சம்மதித்து உள்ளார். 31 வயதாகும் காத்ரீனா  இந்த படத்தில் சீனா பல்கலைக்கழகத்தில்  பணிபுரியும் இந்திய பேராசிரியராக நடிக்கிறார்.ஜாக்கி சான் தொல் பொருள் ஆய்வாளராக நடிக்கிறார். இந்த படத்தில் காத்ரீனா கயூப்புக்கு சண்டைகாட்சிகளும் இருப்பதாக தகவல்கள் தெரிவிகின்றன. இந்த படத்தில் காத்ரீனா நடிப்பது குறித்து முடிவு எடுத்து உள்ளார் ஆனால் இது குறித்து இன்னும் முடிவு செய்யபடவில்லை எனஅவரது செய்தி தொடர்பாளர் கூறி உள்ளார்.

                                                முன்னதாக இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிக்கபோவதாக கூறபட்டது ஆனால் அதை அவர் மறுத்து விட்டார் எனபது குறிப்பிடதக்கது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]