குழந்தைகளை புத்திசாலியாக உருவாக்க மொபைல் அப்ளிக்கேஷன் !
ஆரம்பப்பள்ளி வகுப்பறைகளில் மொபைல் அப்ளிக்கேஷன்களை பயன்படுத்தி குழந்தைகளின் ஆரம்பகால எழுத்தறிவு திறன்களை மேம்படுத்த உதவுகிறது என்று ஒரு புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கல்வி அப்ளிக்கேஷனை பயன்படுத்தி குழந்தைகளின் ஆரம்ப கல்வியை ஊக்குவிக்கவும் மற்றும் ஈடுபாட்டை கொண்டு வர முடியும் என்று ஆய்வு ஆசிரியர் சூசன் நியூமன், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் குழந்தை பருவம் மற்றும் கல்வியறிவு கல்வி பேராசிரியர் கூறியுள்ளார்.
எங்கள் ஆய்வின் நோக்கம் அப்ளிக்கேஷன் மூலம் குழந்தைகளின் கற்றல் ஆற்றலை ஊக்குவிக்கவும், துரிதப்படுத்தவும் முடியும் என்று கூறியது போல இந்த ஆய்வின் முடிவில் நிரூபனமாகியுள்ளது என்றும் நியூமன் தெரிவித்துள்ளார். ஆராய்ச்சியாளர்கள், குறைந்த வருவாய் கொண்ட ஆரம்பபள்ளி குழந்தைகளுக்கு ஹோமர் பயன்பாட்டின் மூலம் கற்றல் என்று அழைக்கப்படும் கல்வி அப்ளிக்கேஷனை பயன்படுத்தி அவர்களின் திறனை ஆராய்ந்து பார்ப்பதற்கு ஆய்வு ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் ஐபாட் அப்ளிக்கேஷன் குழந்தைகளை கல்வியில் ஈடுபடுத்த வார்த்தை ஒலிகள் மற்றும் கதை புத்தகம் படித்தல் ஆகியவை ஒருங்கிணைத்து இந்த அப்ளிக்கேஷனை வடிவமைத்துள்ளனர். 10 வகுப்பறைகளில் உள்ள மொத்தம் 148 ஆரம்பபள்ளி குழந்தைகளுக்கு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் தினசரி ஹோமர் பயன்பாட்டின் மூலம் கற்றல் பயன்படுத்தப்படும் குழந்தைகளுடன் மற்றொரு அப்ளிக்கேஷன் பயன்படுத்தும் குழுவுடன் ஒப்பிட்டு குழந்தைகளின் பேச்சொலி விழிப்புணர்வின் மாற்றங்கள் அளவிடப்பட்டு ஆரம்ப கல்வியறிவில் பல சோதனைகள் மூலம் மதிப்பிட்டனர் ஆராய்ச்சியாளர்கள்.
பேச்சொலி விழிப்புணர்வில் சொற்களை உருவாக்கும் ஒலிகளை உணரும் திறனை, பின்னர் வாசிப்பு திறன் ஆகியவை முக்கியமாக கணிக்கப்பட்டது.