வேப்பம்பூ குழம்பு
தேவையான பொருள்கள்
- வேப்பம்பூ --- 1 கைப்பிடி
- காய்ந்த மிளகாய் --- 1
- கடுகு --- 1/2 டீ ஸ்பூன்
- புளி --- நெல்லிக்காய் அளவு
- வெல்லம் --- 2 ஸ்பூன்
- எண்ணெய், உப்பு --- தேவையானது
செய்முறை
புளியை கரைத்துக் கொள்ளவும். வெல்லத்தைப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து வேப்பம்பூவை அதில் போட்டு லேசாக வறுக்கவும்.மணம் வந்தவுடன் கரைத்த புளியை அதில் விட்டு வெல்லம், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். வேப்பம்பூ குழம்பு தயார்.
பயன்கள்
குழம்பு சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். வயிற்றுப் பூச்சிகளை வெளித்தள்ளும்.