ஃபேஸ்புக்கில் கணக்கு இல்லாமலேயே ஃபேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்தலாம் !




                                          ஃபேஸ்புக் கணக்கு பதிவு இல்லாமலேயே தொலைப்பேசி எண்ணை கொண்டு ஃபேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்த முடியும் என்று சமூக ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது, மற்றொரு நடவடிக்கையாக அப்ளிக்கேஷனை அடைய விரிவுபடுத்தி ஒரு முழுமையான பிளாட்ஃபார்மை உருவாக்கியுள்ளது.  இந்த ஆண்டு முன்னதாக, ஃபேஸ்புக்கில் மெசஞ்சரை அறிமுகப்படுத்திய டெவலப்பர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க், சில்லறை விற்பனையாளர்கள், உணவகங்கள் மற்றும் பிற தொழில்களுக்கு யூசர்களை நேரடியாக இணைக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

                                          சமீபத்திய மேம்படுத்துதல்படி, யூசர்கள் அப்பிள்கேஷனை எப்பொழுது திறந்தாலும், ஃபேஸ்புக்கில் கணக்கு இல்லையா? என்று விருப்பத்தேர்வு மூலம் கேட்கப்படும். பின்னர் அவர்கள் தங்கள் பெயர், தொலைபேசி எண் மற்றும் புகைப்படத்துடன் அதில் பதிவு செய்யலாம். மொபைல் மெசேஜிங் சேவையில் தற்போது வரை 600 மில்லியன் பயனர்கள் உள்ளனர், சமீப மாதகாலமாக விளையாட்டுகள் மற்றும் வீடியோ அழைப்பு உட்பட பல புதிய அம்சங்கள் இந்த மெசேஜிங் சேவையில் சேர்க்கப்பட்டுள்ளது.

                                           ஃபேஸ்புக் ஃபிளாக்ஷிப் சமூக நெட்வொர்க்கில் 1.4 பில்லியன் பயனர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url