ஷாரூக் படத்தால் பாதிப்பு : சல்மான் கான்





                                            பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான ஷாரூக் கான் நடிப்பில் உருவாகியுள்ள ரெய்ஸ் படமும், சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படமும், அடுத்தாண்டு ஈத் பண்டிகையின் போது வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சல்மான் கான் கூறியதாவது, என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. ரெய்ஸ் மற்றும் சுல்தான் படங்கள் ஒரேநாளில் ரிலீஸ் ஆக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நானும், ஷாரூக் கானும், தத்தமது படங்களில் முழுத்திறமையை காட்டி நடித்துள்ளோம். இதற்கு முன்பு, இதேபோன்று, இரு நடிகர்களின் படங்கள் வெளியானபோது, அதில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது நானாகத்தான் இருப்பேன். இப்போது கூட, இதை நான் இழப்பாகவே கருதுவதாக சல்மான் கான் கூறினார்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]