ஓய்வு நேரத்தில் இந்திய ராணுவத்துடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளார் கேப்டன் தோனி. இந்திய ராணுவத்தின் மீது இயல்பாகவே ஈர்ப்பு கொண்டவர் கேப்டன் தோனி, 34. கடந்த 2011ல் இந்தியாவுக்கு உலக கோப்பை பெற்றுத் தந்த இவரை கவுரவிக்கும் வகையில், தரைப்படையின் ‘பாராசூட் ரெஜிமெண்ட்’ பிரிவு சார்பில் கவுரவ ‘லெப்டினென்ட்’ பதவி வழங்கப்பட்டது. அப்போது தோனி கூறுகையில்,‘‘ ஓய்வு பெற்ற பின், ராணுவத்தில் இணைந்து தீவிரமாக பணியாற்ற விரும்புகிறேன்,’’ என்றார். கடந்த ஆண்டு டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, ராணுவம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது, வீரர்களை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடவுள்ளார்.