Matrimony OTT-Platforms Jobs Coupons Business

வியக்க வைக்கும் தனுஷ், சிம்பு நட்பு !


                                             சிம்பு, தனுஷின் திடீர் நெருக்கமும், நட்பும் திரையுலகில் சமீபத்தில் ஆச்சரியப்பட வைக்கும் ஒரு விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது. தன்னுடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க வைக்க  சிம்புவை தனுஷ் தான் சம்மதிக்க வைத்தார் என்கிறார்கள். இதுவரை அண்ணன் செல்வராகவனால் நடிகராக வளர்க்கப்பட்ட தனுஷ், மீண்டும் அண்ணனின் இயக்கத்தில் நடிக்காமல் அந்த வாய்ப்பை சிம்புவுக்கு வழங்கியதை அனைவருமே ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள். அது மட்டுமல்ல, இவரது படத்தைப் பற்றி அவர் பாராட்டிப் பேசுவதும், அவர் படத்தின் டிரைலரை இவரும் ஷேர் செய்வதுமாக மாறி மாறி பாசமழை பொழிந்து கொண்டு வருகிறார்கள்.  ஒரு சாதாரணமான சந்திப்பைப் பற்றிய பதிவைக் கூட இருவரும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதும், வாழ்த்துத் தெரிவித்துக் கொள்வதும் ஆச்சரிய அலைகளை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்படியே போனால், இருவரும் விரைவில் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தாலும் ஆச்சரியமில்லை என்றே தோன்றுகிறது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad